டெல்லியில் திடீர் சந்திப்பு.. ஐஸ்வர்யா தனுஷிடம் 'தகவல்' சொல்லி அனுப்பிய சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: ரஜினிகாந்த் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான எந்த தகவலையும் ஐஸ்வர்யா தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவில்லை.
இருப்பினும் ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, இன்று இருவரும் டெல்லியில் சந்தித்து பேசிக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட் பதிவை சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

ரஜினிகாந்த்துடன் சந்திப்பு
மேலும், சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பதிலில் ரஜினிகாந்த் எனக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்களை தனது மகளிடம் சொல்லி அனுப்பியுள்ளார். எனது வாழ்த்துக்களை ரஜினிகாந்துக்கு தெரிவிக்குமாறு ஐஸ்வர்யா தனுஷிடம் நான் கூறியிருக்கிறேன். அடுத்த முறை சென்னைக்கு நான் செல்லும் போது ரஜினிகாந்தை சந்திக்க வருகிறேன் என்ற தகவலையும் ஐஸ்வர்யா தனுஷிடம் சொல்லி அனுப்பி இருக்கிறேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.

புத்திசாலிப் பெண்
மேலும், இன்னொரு ட்விட்டர் பயனரிடம், இது தொடர்பாக ஐஸ்வர்யா தனுஷ் புத்திசாலிப் பெண் என்று புகழ்ந்து சொல்லியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. ஐஸ்வர்யா தனுஷ் எதற்காக சுப்பிரமணியன் சுவாமியை திடீரென்று டெல்லியில் சந்தித்து பேசினார் என்ற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை. சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்டை வைத்து பார்த்தால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதும் ரஜினிகாந்த் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதும் தெரிகிறது.

பாஜக தலைவர்களுடன் நட்பு
பாஜக தலைவர்கள் பலருடன் நெருங்கிய நட்பு கொண்டவர் ரஜினிகாந்த். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. சமீபகாலமாக பாஜக தலைமை மீது சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் பொருளாதார கொள்கைகள் பற்றி தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்து வருகிறார்.

பல கேள்விகள்
பணமதிப்பிழப்பு தொடங்கி கொரோனா நோய் பரவல் காலத்தில் மத்திய அரசு எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் வரை பல விஷயங்களில் சுப்பிரமணியன் சுவாமி எதிர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ், சுப்ரமணியன் சுவாமியுடன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications