பாஜக கூட்டணியில் பிளவு- டெல்லியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு?
டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, டெல்லி யூனியன் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 25 முதல் 30 தொகுதிகளில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில் மகாராஷ்டிரா தவிர்த்த பிற மாநிலங்களிலும் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது.

2020-ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த நிலையில் முதல் முறையாக தற்போது டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
டெல்லி தேர்தலில் 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடுவது என அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. டெல்லி தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் விரைவில் அறிவிக்க உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications