3 நாளா? ஏன்ங்க! நான் என்ன கொலைக்காரனா? கொள்ளைக்காரனா?.. ரசிகரை கலாய்த்து விளையாடிய அஜித்குமார்
டெல்லி: நான் என்ன கொலைக்காரனா, இல்லை கொள்ளைக்காரனா என ரசிகரை நடிகர் அஜித்குமார் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார், தல என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். ஆனால் அவர் அண்மையில் தன்னை யாரும் தல என அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அவர் தனது ரசிகர்களை ஏகே, அஜித்குமார், அஜித் ஆகிய பெயர்களை கொண்டே அழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மனிதாபிமானம், ஜனநாயக கடமை, சமூக பொறுப்பு உள்ளிட்டவைகளுடன் நல்ல மனிதராக அஜித் குமார் திகழ்கிறார்.

நடிப்பில்
இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பைக் ஓட்டுவதில் வல்லவர். இந்த பைக் மீதான தீராத காதலால் அவ்வப்போது ரேஸில் கலந்து கொண்டு தன் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வார். அஜித்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன ரசிகர்கள், அவரை பார்த்து பாதுகாப்பாக பைக் ஓட்டுவது எப்படி என்பதை கற்றுக் கொள்கிறார்கள். பைக்கிலேயே உலகை சுற்றி வர அஜித் முடிவு எடுத்துள்ளார்.

வலிமை படம்
வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் முடிந்த பிறகு ரஷ்யாவில் சுமார் 5000 கி.மீ. பைக் ரெய்டு செய்த அஜித், துப்பாக்கிச் சுடுதலிலும் வல்லவர். சிறிய ரக டிரோன் செய்வதிலும் வல்லவர். தற்போது ஏகே 61 படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இந்த கேப்பில் இமயமலைக்கு அவர் டிரிப் அடித்துள்ளார்.

இந்திய எல்லை
லடாக்கில் இந்திய எல்லையில் உள்ள பாதுதாப்பு படை வீரர்களுடன் உரையாடினார். இதையடுத்து கேதார்நாத், பத்ரிநாத் என பல்வேறு இடங்களுக்கு பைக்கில் செல்கிறார். தன்னை அடையாளம் காண வகையில் கிளவுஸ், தலையில் ஹெல்மெட் உள்ளிட்டவற்றை அணிந்து கொள்கிறார்.

ரிலாக்ஸிங்
அப்படியும் எங்காவது ரிலாக்ஸ் செய்ய நினைத்து முகத்தை துடைக்கவோ தண்ணீரால் கழுவவோ நினைத்து ஹெல்மெட்டை நீக்கும் போது ரசிகர்களின் கண்களில் தென்படுகிறார்கள். அப்போது தன்னுடன் செல்பி எடுக்கும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுகிறார்.

ரசிகரிடம் கிண்டல்
அஜித் தன்னுடன் பைக் பயணத்தில் கலந்து கொண்டவர்களுடன் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அஜித்தை சந்தித்தார். அப்போது அவர் மகிழ்ச்சியின் மிகுதியால் சார் உங்களை 3 நாட்களாக தேடி வருகிறேன் என்கிறார். அதற்கு அஜித், என்னாது 3 நாளாக தேடுகிறீர்களா நான் என்ன கொலைக்காரனா இல்லை கொள்ளைக்காரனா என கிண்டலாக கேட்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications