Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பல் கலவரத்துக்கு பின்னணியில் பாஜக.. தேர்தல் முறைகேடுகளை திசைதிருப்ப நாடகம்.. அகிலேஷ் யாதவ் பகீர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் முறைகேடுகளை திசைதிருப்பவே உத்தர பிரதேசத்தில் சம்பல் பகுதியில் பாஜக கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். சம்பல் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் இன்று பலியானது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சம்பல் என்ற இடத்தில் ஷாஹி ஜமா மசூதி ஒன்று உள்ளது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்தக் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

uttar pradesh akhilesh yadav

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதி உள்ள இடத்தில் ஆய்வு செய்யவேண்டும் என்று கூறி, அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான ஆய்வை தொடருங்கள் என உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளூர் போலீசார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் கடந்த 5ஆம் தேதி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு அந்த பகுதியில் இருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் இன்று காலை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தனர். ஆய்வுக் குழுவினர் ஜமா மசூதிக்கு வருகை தந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் பலரும் ஒன்றாக இணைந்து ஆய்வு செய்தவர்கள் மீது கல்வீச்சு நடத்தினர். உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள்.

இதனால் கடும் கோபமடைந்த உள்ளூர் மக்கள் அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. சம்பல் பகுதியில் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உத்தர பிரதேச மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பேசியுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "சம்பலில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து விவாதங்கள் நடைபெறாமல் திசைதிருப்ப ஆய்வுக் குழுவினரை இன்று காலை வேண்டுமென்றே அங்கு அனுப்பி குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் எதற்காக காலை நேரத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி மீண்டும் ஆய்வு செய்ய வந்தனர்? அங்கு நடைபெற்ற வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். நான் எந்த சட்ட நடைமுறைகளுக்குள்ளும் செல்லவில்லை. ஆனால், இதன் மற்றொரு பக்கம் குறித்து பேசப்படாமலே உள்ளது. சம்பலில் நடந்த வன்முறை சம்பவம் தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாஜகவால் தூண்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும், மீதமுள்ள 7 இடங்களில் பாஜக கூட்டணியும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

வாக்குப்பதிவு நாளில், சமாஜ்வாடி கட்சியின் அனைத்து பூத் ஏஜெண்டுகள் மற்றும் வாக்களிக்க விரும்பிய சமாஜ்வாடி கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர். வாக்களிக்க விடாமல் அவர்களைத் தடுத்து அவர்களின் வாக்குகளை யார் பதிவு செய்தது? சமாஜ்வாடி கட்சி வாக்குகள் வாக்குச் சாவடிகளில் பதிவாகவில்லை" என்று அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+