பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? ஸ்டாலின் கருத்துக்கு அகிலேஷ் யாதவ் அதிருப்தி
பிரதமர் வேட்பாளர் குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து கூட்டணியின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பிரதமர் வேட்பாளர் குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து கூட்டணியின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
2019 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் ஸ்டாலினின் கருத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, பாஜக அரசு மீதான அதிருப்தி காரணமாகவே மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் போன்ற தலைவர்கள் தான் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி யாராவது (ஸ்டாலின் ) தனது கருத்தை தெரிவித்தால், அதனை கூட்டணியின் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
கடந்த 16 ம் தேதி நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தினார். இந்த கருத்துக்கு அடுத்த நாளே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
அதே போல தற்போது அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதால், தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications