லோக்சபாவில் அனல் பறந்தது.. அகிலேஷ் யாதவ் vs அமித்ஷா கடும் வார்த்தை யுத்தம்.. குறுக்கிட்ட சபாநாயகர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகிலேஷ் யாதவ் பேசிய போது, சபாநாயகர் குறித்து பேசினார். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் பேசியது தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

லோக்சபாவில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்பட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரு சேர எதிர்ப்பை பதிவு செய்தன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசும் போது சபாநாயகரின் அதிகாரம் பறிக்கப்படுவதாகவும் பேசினார்.

waqf bill amendment Amit Shah Akhilesh Yadav

உங்களுக்காக போராடுவோம்: இதைக் கேட்டதும் உடனே எழுந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகிலேஷ் யாதவிற்கு பதிலடி கொடுத்தார். இதனால், லோக்சபாவில் அகிலேஷ் யாதவ் - அமித்ஷே இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றது. இருவரும் காரசாரமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

வக்பு வாரிய மசோதாவிற்கு எதிராக அகிலேஷ் யாதவ் ஆவேசமாக லோக்சபாவில் பேசிக் கொண்டு இருந்தார். அகிலேஷ் யாதவ் பேசுகையில், வக்பு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்களை சேர்ப்பது ஏன்?, எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சபாநாயகர் அவர்களே உங்களின் அதிகாரமும் பறிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நீதிபதி நீங்கள்தான் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உங்களின் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக லாபியில் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக போராடுவோம்" என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானது இல்லை: இதைக் கேட்டதும், உடனே எழுந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகிலேஷ் யாதவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமித்ஷா கூறுகையில், " இது சபாநாயகரை இழிவுபடுத்துவதாக உள்ளது. சபாநாயகரின் அதிகாரம் என்பது எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானது கிடையாது. ஒட்டு மொத்த அவைக்குமானது. சுற்றி வளைத்து பேசிக்கொண்டு இருக்க வேண்டாம். சபாநாயகரின் உரிமைகளை பாதுகாக்கும் நபர் நீங்கள் கிடையாது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, "அவை நடவடிக்கைகள் குறித்தோ, சபாநாயகர் குறித்தோ உறுப்பினர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அனுபவம் மிக்க உறுப்பினர்கள் இதை கவனித்துக்கொள்வார்கள். சபாநாயகர் குறித்து தனிப்பட்ட முறையில் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம்" என்றார்.

வக்பு வாரிய மசோதா: நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி இருக்கின்றனர். இந்த நிலம்தான் வக்பு வாரிய சொத்துகள் எனப்படுகின்றன. இதற்காக 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. 1958-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன. வக்பு வாரியங்களானவை, மசூதிகள்- மதரஸாக்கள், தர்காக்களை நிர்வகிக்கும் நிர்வாக முறைகளைக் கண்காணிக்கும்.

இந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும். வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான விரிவான சட்டம் கடந்த 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திலும் 2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திருத்தம் கொண்டு வந்தது.

44 திருத்தங்கள்: இதன் அடிப்படையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் வக்பு வாரிய சட்டத்தில் சில திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய அமைச்சர், 3 எம்பிக்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும் பொன்ற ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவதே இந்த சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+