இனி இரட்டை கோபுர தாக்குதலை போல பல தாக்குதல் நடக்கும்! ஃப்ளைதுபாய் சம்பவம்.. அல்கொய்தா புது வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானங்களை குறிவைத்து இரட்டை கோபுர பாணியில் தாக்குதல்களை நடத்த வேண்டும் என அல்கொய்தா ஆதரவு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தை விபத்திற்குள்ளாக்கும் முயற்சி நடந்த நிலையில், அதை பாராட்டிய அல்கொய்தா ஆதரவு அமைப்புகள், இதேபோல பல தாக்குதல்களை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே அல்கொய்தா ஆதரவாளர்களால் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட வார இதழான 'அல்-பயான்' வெளியிட்ட சமீபத்திய பதிப்பில் இரட்டை கோபுர தாக்குதல்களை போல விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை அல்கொய்தாவுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனல்களிலும் பகிரப்பட்டதாகவும், பின்னர் அந்த பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Al Qaeda flight

இரட்டை கோபுர தாக்குதல்

செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்தையும் அல் பயான் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. 170க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி, பைலட் ஸ்மித் மச்சாரை கோடரியால் தாக்கினார். மேலும், பைலட் ஸ்மித் விமானத்தை விபத்திற்குள்ளாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது விமானம் 30 விநாடிகளில் சுமார் 16,000 அடிக்கும் மேல் சரிந்துள்ளது. அப்போது எமர்ஜென்சி மற்றும் கடத்தல் அலர்ட் கூட விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகருக்கு திருப்பி விடப்பட்டது. துணை விமானி தாக்கியதில் காயமடைந்த பைலட் ஸ்மித் தரையில் இருந்தபோதும், காக்பிட் கதவை திறந்துள்ளார்.

என்ன நடந்தது?

இதையடுத்து பயணிகள் சிலர் விமான அறைக்குள் சென்று துணை விமானியை கட்டுப்படுத்தினர். விமானத்தில் பயணம் செய்த ஓய்வில் இருந்த இரண்டு ஃப்ளைதுபாய் விமானிகள் பின்னர் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஐக்கிய அமீரக அரசு பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கான நோக்கம் , அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.

பல தாக்குதல்கள்

இந்த சூழலில் தான் ஃப்ளை துபாய் தாக்குதலை போல மேலும் பல தாக்குதல்கள் நடத்த வேண்டும் என அல்கொய்தா துணை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் பயணிக்கும் விமானங்களை குறிவைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா ஆதரவு அமைப்புகளின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

என்ன நடந்தது

அமெரிக்க மண்ணில் அல் கொய்தா பயங்கரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினர். விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானம் மோதி இருந்தது. மேலும், சில விமானங்களும் கடத்தப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2001ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரட்டை கோபுர தாக்குதல் படத்துடன், ஃப்ளைதுபாய் சம்பவத்தை குறிப்பிட்டு அல்கொய்தா ஆதரவு படைகள் எச்சரித்துள்ளது. ஃப்ளைதுபாய் விமான சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தாவின் இந்த எச்சரிக்கை குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+