இந்தியாவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ? தனியார் நிறுவனங்களுக்கு.. மத்திய அரசு கிடுக்குபிடி உத்தரவு
டெல்லி: நாட்டில் சில இடங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 27ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் விலையைக் காட்டிலும், சில்லறை வர்த்தகத்தில் குறைவான விலையில் விற்கப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டத்தைச் சந்திக்கிறது.

சில்லறை வர்த்தகம்
சில்லறை வர்த்தகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.7 ரூபாயும் டீசலுக்கு 31.9 ரூபாயும் வருமான இழப்பு ஏற்படுகிறது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வேறு வழியின்றி பம்புகளை தொடர்ந்து இயக்குகின்றனர். அதேநேரம் எந்தவொரு தனியார் நிறுவனங்களாலும் இந்தளவுக்கு நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாது என்பதாலேயே அவர்கள் சில்லறை விற்பனையைக் குறைத்துவிட்டு, ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால் நாட்டில் பல இடங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு
இதனிடையே அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ரிலையன்ஸ், ஷேல், நயாரா ஆகிய நிறுவனங்கள் தங்கள் அனைத்து பம்புகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற விதி உள்ளதால், நியாயமான விலையில் பெட்ரோல்- டீசலை விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

கண்டிப்பாக
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அத்தியாவசிய பொருட்கள் விநியோக சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பெட்ரோல் பம்புகளிலும் விற்பனையைத் தொடங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உரிமம் ரத்து
நாட்டின் பல மாநிலங்களில் கிராமப்புறங்களில் போதிய எரிபொருள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019இல் வெளியிடப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோக வழிகாட்டுதல்கள் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்களில் உரிமம் ரத்து செய்யப்படும் ஆபத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன நிலை
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கும், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் சில இடங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4900 பம்புகள் உள்ள நிலையில், அவற்றில் குறைந்தது 1000 பம்புகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களில் எரிபொருள் நிரப்ப மக்கள் திரள்வதால் பாதுகாப்பிற்கு போலீசாரை அழைக்கும் நிகழ்வுகளும் தொடர்கிறது.

விளக்கம்
இருப்பினும், இதை அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. நாட்டில் எந்தவொரு எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லை என்றும் நாட்டின் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த சிக்கலுக்குக் காரணம் எனக் கூறி உள்ளது. இது விநியோக சங்கிலியில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை என்றும் இது மிக விரைவில் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
உயர்ந்தது "பவர்" பெட்ரோல் விலை.. தொழில்துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.21 எகிறியது -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications