பைக்கில் 3 பேர் செல்ல அனுமதி அளிக்கப்படுமா? மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அளித்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் அதாவது ஹெல்மெட் அணிந்த படி மூன்று பேர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கேரள எம்.பி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரிடம் இருசக்கர வாகனங்களே உள்ளது. அன்றாட வேலைக்கு செல்வது உள்பட தங்களின் பெரும்பாலான பயண தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் மோட்டார் வாகன விதிகள் படி பைக்கில் இருவர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.

Allowing three people on a two-wheeler is not prudent: Nitin Gadkari

முன்றாவதாக ஒருவர் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில், பைக்குகளில் 10 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையையும் சேர்த்து 3 பேர் பயணம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் எழுந்தது. கேரளாவில், முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த கோரிக்கை வலுத்தது.

எனவே, பைக்கில் மூன்று பேர் பயணம் செய்ய அனுமதி அளிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தலாமா என்பது குறித்து கேரளாவில் ஆளும் கட்சி ஆலோசித்தது. இதையடுத்து, கடந்த மாதம் 1 ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கேரள எம்.பி இளமாறம் கரீம் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் வாகன ஓட்டி உள்பட 3 பேர் ஹெல்மெட் அணிந்து செல்ல அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

Allowing three people on a two-wheeler is not prudent: Nitin Gadkari

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட பயணத்திற்கு பைக்குகளையே பயன்படுத்துகிறார்கள். அனைவராலும் கார் வாங்க முடியாது. எனவே பைக்குகளில் 3 பேர் செல்ல அனுமதி அளிக்கலாம்" என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

இது தொடர்பாக இளமாறம் கரீமுக்கு நிதின் கட்காரி எழுதிய கடிதத்தில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1998-ன் படி பைக் ஓட்டுபர் தனது வாகனத்தில் ஒருவருக்கு மேல் கூடுதலாக இன்னொருவரை ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை. உலகம் முழுவதிலும் இரு சக்கர வாகனங்கள் 2 பேர் மட்டுமே பயணிக்க ஏற்ற விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்படுகின்றன. எனவே இருசக்கர வாகனத்தில் மூன்று பேரை ஏற்றி செல்வது புத்திசாலித்தனமான நடைமுறை இல்லை." என்று பதிலளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+