மதம் எங்களை பிரிக்க முடியாது.. ஓங்கியடித்த ஓக்லா மக்கள்! ஆம் ஆத்மி வரலாற்று வெற்றி, நிலைகுலைந்த பாஜக
Recommended Video
டெல்லி: ஷாஹீன் பாக் அமைந்துள்ள ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கான் 91,949 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெறும் இடம் ஷாஹீன் பாக். சமீபத்தில் 4 மாத குழந்தையை போராட்டத்திற்கு அதன் பெற்றோர் அழைத்துச் சென்றபோது குளிர் கொடுமையால் அந்த குழந்தை பலியானது.
இருப்பினும், போராட்டக்காரர்கள், தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. ஆனால், பாஜகவோ இந்த போராட்டத்தை தேச விரோதம் என்ற ரீதியில் சித்தரித்தது.

அதிரனும்
ஒரு கூட்டத்தில் அமித் ஷா, 'டெல்லியின் ஈ.வி.எம்களின் பொத்தானை மிகவும் சத்தமாக அழுத்தவும். ஷாஹீன் பாக்கில் மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி அதிர வேண்டும் என அமித் ஷா பேசினார். அமித் ஷா தனது பல கூட்டங்களில் "நீங்கள் ஷாஹீன் பாக் மக்களுடன் இருக்கிறீர்களா அல்லது பாரத் மாதா என்ற முழக்கத்தை எழுப்பியவர்களுடன் இருக்கிறீர்களா என்று தேர்தலில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

போர்
மாடல் டவுன் தொகுதியின் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா தனது ஒரு ட்வீட்டில் ஷாஹீன் பாக்கை மினி பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். இந்த தேர்தல் இந்தியா-பாகிஸ்தான் போர் என வர்ணித்தார். அதன்பிறகு தேர்தல் ஆணையமே தலையிட்டு, அவரது பிரச்சாரத்திற்கு தடை செய்தது. அதே நேரத்தில், பாஜக எம்.பி. பிரவேஷ் வர்மாவும் இந்த போராட்ட நபர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வார்கள் என்றும் மோசமாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார்.

இந்து ஓட்டுக்கள்
இப்படியான ஒரு தொகுதியில்தான் ஆம் ஆத்மி வேட்பாளர் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி முஸ்லீம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதிதான். ஆனால், முஸ்லீம்கள் மட்டுமே, ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போடவில்லை. பெரும்பாலான இந்து ஓட்டுக்களும், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மிக்குத்தான் வந்துள்ளது.

பாஜக திட்டம்
இந்த தொகுதியில் சுமார் 59 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால், இவர் பெற்ற வாக்குகள், 1,07647, பாஜக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் 15,698. சுமார் 80 சதவீதம் ஓட்டுக்களுக்கும் மேல் அமானதுல்லா கானுக்கு கிடைத்துள்ளன. எனவே, முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்துக்களும், ஆம் ஆத்மி வேட்பாளருக்குத்தான் ஓட்டுப் போட்டுள்ளனர். மதத்தால் வாக்குகளை இணைக்கலாம் என்று நினைத்த பாஜகவின் அத்தனை திட்டமும் புஸ்வானமாகிவிட்டது.

செயல் தேவை
உலகின் ஆகச்சிறந்த சொல் செயல்தான் என்பதை டெல்லி மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளனர். கெஜ்ரிவால் அரசின் வளர்ச்சிப் பணிகள்தான் அவர்களுக்கு தேவையே தவிர, மத கோஷங்கள் கிடையாது என்பதுதான் ஓக்லாவில் பாஜகவுக்கு கிடைத்துள்ள மாபெரும் தோல்விக்கான சாட்சி. இனிமேலாவது பிற மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு அமல்படுத்தி ஓட்டுக் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு வருமளவுக்கு டெல்லி மக்கள் அதுவும், ஓக்லா மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.
-
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications