அமேசான் மேனேஜர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. காதுக்கு பின்புறம் தலையில் குண்டு பாய்ந்ததால் சோகம்
டெல்லி: டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்தவரை 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அமேசான் நிறுவனத்தின் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்தவர் ஹர்ப்ரீத் கில் (36). இவர் தனது நண்பர் கோவிந்த் சிங்குடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வடகிழக்கு டெல்லியின் பஜன்புராவின் சுபாஷ் விஹார் பகுதியில் இவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஹர்ப்ரீத் கில் வந்த பைக்கை வழிமறித்தது. அப்போது திடீரென அந்த 5 பேர் கொண்ட கும்பல் ஹர்பிரீத் கில் மீது மட்டும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சென்றுவிட்டது.
இதில் ஹர்ப்ரீத் தலையில் தோட்டா பாய்ந்துவிட்டது. அப்போது ரத்த வெள்ளத்தில் கில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். கில்லுடன் வந்த கோவிந்த் சிங் காயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கோவிந்த் சிங்கிற்கு 32 வயதாகிறது, அவர் பஜன்புரா பகுதியில் வசித்து வருகிறார். மோமோஸ் கடையை நடத்தி வருகிறார்.
தனது தாய், தந்தையிடம் வீட்டை விட்டு செல்லும் போது 10 நிமிடங்களில் வந்துவிடுவதாக கில் தெரிவித்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இரவு 11.30 மணிக்கு நடந்தது. துப்பாக்கி தோட்டா கில்லின் வலது பக்க காதுக்கு பின்புறம் பாய்ந்து மறு முனையில் வெளியே வந்தது.
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த கும்பல் இந்த கொலை நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இவர்கள் டான் ஆகும் ஆசையில் அவ்வப்போது ஆயுதங்களுடன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரிலீஸ் செய்தனர். அதில் துப்பாக்கியை வைத்தபடி கூட இவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த கும்பல் தப்பியோடிய வழியையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications