Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானியெல்லாம் ஓரம்போ.. ஒரே வருஷத்தில் அதிக சொத்துக்களை சேர்த்து.. மலைத்த இந்தியா.. யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானிக்கு ஒருவர் டஃப் தந்துள்ளார் என்றால், அது யாராக இருக்கும்? என்னதான் ஹிண்டன்பர்க் விவகாரம் வெடித்து கிளம்பினாலும், தன்னுடைய அசாத்திய வளர்ச்சியை உலகுக்கு நிரூபித்துள்ளர் அதானி.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் என்றாலே, அம்பானியுடன் சேர்த்து அதானி பெயரும் உச்சரிக்கப்படுவது வழக்கமாகும்.. ஏகப்பட்ட துறைகளில் நிறுவனங்களை நடத்தி கொண்டிருக்கிறார்.. தன்னுடைய தொழிலையும் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி வருகிறார்.. இதனால், அவரது சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் மிக வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

ambani adani

இதனால் இந்தியாவையும் தாண்டி, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு அதானி உச்சிக்கு போக துவங்கினார்.- அதிலும், ஒரு கட்டத்தில், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரர் முகேஷ் அம்பானியையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு உயர்ந்தார் அதானி.

பணக்காரர்கள்: உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்குக் கூட சென்றார். இந்நிலையில்தான், கடந்த வருடம் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கை, மிகப்பெரிய சறுக்கலை அதானிக்கு தந்துவிட்டது.. எனினும், இப்போது அதானியின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகளே மூக்கில் விரலை வைத்துள்ளன.

இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் [Forbes] இதழ் வெளியிட்டுள்ளது... அதன்படி, இந்த 2024ம் ஆண்டில் 100 இந்தியப் பணக்காரர்களில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரரான அம்பானி நடப்பு ஆண்டில் 27.5 பில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். அதனால், அவரின் சொத்துமதிப்பு தற்போது 119.5 பில்லியன் டாலர்களாக [11.9 லட்சம் கோடி ருபாய்] அதிகரித்துள்ளது.

டாப் லெவல்: எனவே, உலகப்பணக்காரர் லிஸ்ட்டில் அம்பானிக்கு 13 வது இடம் கிடைத்துள்ளது.. அதற்கு அடுத்தபடியாக 116 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [11.6 லட்சம் கோடி ருபாய்] சொத்துமதிப்புடன் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி 2வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால், மொத்த மதிப்பில் அம்பானிக்கு அடுத்தபடியாக இருந்தாலும், கடந்த ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்ததில் அம்பானியை அதானி பின்னுக்கு தள்ளிவட்டாராம்.. அதாவது, அதானி கடந்த ஒரே ஆண்டில், 48 பில்லியன் டாலர்கள் சொத்துக்களை சேர்த்திருக்கிறாராம். இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட டபுள் மடங்கு அதிகமாகும்.. அதனால், பணக்காரர் லிஸ்ட்டில் முதலிடத்தை நோக்கி அதானி முன்னேறி கொண்டிருக்கிறாராம்.

வியப்பு: 3.7 பில்லியன் டாலர் மதிப்புடன் சாவித்திரி ஜிண்டால் 3வது இடத்திலும், ஷிவ நாடார் 4வது இடத்திலும் உள்ளனராம்.. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு இந்த வருடம் மட்டும் மொத்தமாக 40 சதவீதம் உயர்ந்து 1 ட்ரில்லியன் டாலர்கள் என்ற அளவைக் கடந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+