டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?

டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் இருந்து கேன்சர் பாதித்த பெண் பயணி இறக்கி விடப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?

டெல்லி: டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணி, தனது ஹேண்ட் பேக்கை தலைக்கு மேலே இருக்கும் கேபினில் வைக்க உதவுமாறு விமான பணிப்பெண்ணிடம் கேட்டதை தொடர்ந்து விமானத்தில் இருந்து அந்த பயணி இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கடந்த 30 ஆம் தேதி மீனாக்‌ஷி செங்குப்தா என்ற பெண் பயணிக்க இருந்தார். கேன்சர் நோயால் பாதித்த அந்தப் பெண் பயணி சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

இதனால், மிகவும் பலவீனமாக இருந்த அந்த பெண் பயணிக்கு விமானத்தில் ஏறும் முன்பாக ஊழியர்கள் மிகவும் கனிவு காட்டியுள்ளனர். ஆனால் விமானத்தின் ஏறியவுடன் நிலைமை அப்படியே தலைகீழானதாக மாறியிருக்கிறது.

உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக.. தகிக்கும் ஈரோடு தேர்தல்! டெல்லி பறக்கும் தமிழ்மகன் உசேன் - என்னாச்சு? உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக.. தகிக்கும் ஈரோடு தேர்தல்! டெல்லி பறக்கும் தமிழ்மகன் உசேன் - என்னாச்சு?

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே

விமானத்தில் ஏறியவுடன் தனது உடல் நிலை குறித்து அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் கூறியிருக்கிறார். தன்னுடன் ஒரு ஹேண்ட் பேக்கையும் மீனாக்‌ஷி செங்குப்தா கொண்டு வந்து இருக்கிறார். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்துள்ளது. விமானத்தின் விளக்குகள் டிம் செய்யப்பட்டதும் மீனாக்‌ஷி செங்குப்தா இருக்கைக்கு அருகே வந்த விமான பணிப்பெண், அவரிடம் இருந்த ஹேண்ட் பேக்கை மேலே உள்ள கேபினில் வைக்க வலியுறுத்தி இருக்கிறார்.

5 பவுண்டுகளுக்கு மேலே

5 பவுண்டுகளுக்கு மேலே

உடனே 5 பவுண்டுகளுக்கு மேலே எடை கொண்ட அந்த ஹேண்ட் பேக்கை தன்னால் வைக்க முடியவில்லை என்றும் உதவுமாறும் பணிப்பெண்ணிடம் மீனாக்‌ஷி செங்குப்தா கேட்டுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த விமான பணிப்பெண், தன்னுடைய வேலை இது இல்லை என கூறியிருக்கிறார். தயவு செய்து தனக்கு உதவுமாறு மீண்டும் மீண்டும் மீனாக்‌ஷி செங்குப்தா வலியுறுத்திய போது கோபத்தை வெளிப்படுத்திய விமான பணிப்பெண் அங்கிருந்து சென்றுள்ளார். மிகவும் மூர்க்கத்தனமாகவும் ஆணவத்துடன் பேசிய விமான பணிப்பெண் பேசியிருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த செங்குப்தா விமானத்தில் இருந்த பிற சிப்பந்திகளிடம் இது குறித்து புகார் சொல்லியிருக்கிறார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் புகார்

விமான நிலைய அதிகாரிகளிடம் புகார்

ஆனால் விமான சிப்பந்திகள் அனைவரும் ஒருமித்த குரலில் இதை இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் உங்களுக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தால் விமானத்தில் இருந்து இறங்கி விடுங்கள் என செங்குப்தாவிடம் கூறியிருக்கின்றனர். விமானத்தில் இருந்து மீனாக்‌ஷி செங்குப்தாவை இறக்கி விடும் முடிவில் விமான சிப்பந்திகள் அனைவரும் இருந்துள்ளனர். இதையடுத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பெண் பயணி டெல்லி போலீசாரிடமும் விமான நிலைய அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார். மேற்கண்ட தகவல் மீனாக்‌ஷி செங்குப்தா டெல்லி போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விமான கட்டணத்தை திருப்பி அளிப்பது

விமான கட்டணத்தை திருப்பி அளிப்பது

இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரத்தில் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் டெல்லி மகளிர் ஆணையத்திற்கும் பலரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உரிய அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு குழு மீனாக்‌ஷி செங்குப்தாவிற்கு விமான கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து தொடர்பு கொண்டுள்ளதாகவும் பயணி இறக்கிவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளது.

English summary
A cancer-stricken female passenger on an American Airlines flight from Delhi to New York City was reportedly removed from the flight after she asked a flight attendant to help her carry her handbag in the overhead cabin. Details of this incident can be found here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X