நீட் சர்ச்சைக்கு நடுவே.. கோல் போடும் "கிளாட்.." விளம்பரத்தை பார்த்தீங்களா.. இப்படி யோசிக்கிறாங்களே
டெல்லி: நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சட்ட படிப்புகளுக்கான தேர்வான (CLAT) கொடுத்துள்ள விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டிங் ஆகி வருகிறது.
தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது, பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வே இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

நீட் தேர்வு சர்ச்சை: கடந்த மாதம் 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ரிசல்ட் வெளியானதில், 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதல் மதிப்பெண் எடுத்ததும், மைனஸ் மதிப்பெண் இருக்கும் போது, 719, 718 மதிப்பெண்கள் எல்லாம் எப்படி எடுக்க முடியும் என்ற சந்தேகமும் வந்தது.
இதனால் நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் முன்கூட்டியே கசிந்த வினாத்தாளை பயன்படுத்தி தேர்வு எழுதியோருக்கு மருத்துவ சீட் கிடைத்துவிடும். நேர்மையாக படித்த தங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
கிளாட்: இப்படி நீட் தேர்வுகளில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சலசலப்புகளுக்கு இடையே சட்ட படிப்புகளுக்கான தேர்வான (CLAT) கொடுத்துள்ள விளம்பரம் சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது முன்னணி செய்தித்தாள்களில் கிளாட் கொடுத்த விளம்பரத்தில், தேர்வர்கள் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் கவனம் செலுதுவதற்கு பதிலாக கிளாட் தேர்வை எழுதுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் கூறியுள்ளது.
கிளாட் கொடுத்த இந்த விளம்பரம் தான் இணையத்தில் வேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. கிளாட் அளித்த அந்த விளம்பரத்தில், நீட் ரிசல்ட்களால் அதிருப்தியில் உள்ளீர்களா? நீட், ஐஐடி, ஜேஇஇ-யை தாண்டி சிந்தியுங்கள்.. கிளாட் தேர்வு பற்றி யோசியுங்கள்” என்று தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்தை எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று கிளாட்-டிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து: இன்று காலையில் இருந்தே எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள், கிளாட் அளித்த விளம்பரத்தை வேகமாக பகிர்ந்து வருவதோடு, தங்களுக்கே உரிய பாணியில் கமெண்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள். வழக்கறிஞர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என ஒரு நெட்டிசன் பதிவிட்டு வருகிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த இரண்டுமே முற்றிலும் வேறுபட்ட தேர்வுகள்..இதை எப்படி ஒப்பிட முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
கிளாட் தேர்வு என்றால் என்ன?: மத்திய அரசின்கீழ் நாடு முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர 'கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது மட்டும் இன்றி தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, இதற்கு பதில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், ‛‛நீட் தேர்வு தொடர்பான முறைகேடு புகார்களால் நீட் தேர்வின் புனித தன்மை கெட்டுப்போய்விட்டது. இதற்கு விடை தேவைப்படுகிறது. இதனால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக் கூறியது. மேலும் வழக்கு விசாரணை ஜுலை 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications