பாகிஸ்தானை மிரட்டும் ராட்சசன்.. இந்தியா களமிறக்கிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்.. பெரும் பதற்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக அரபிக்கடலில் நம் நாட்டின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் மூலம் எதிரி நாடுகளை கொடூரமாக தாக்கி அழிக்க முடியும் என்பதால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது. இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் என்பது என்ன? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. அதேவேளையில் இந்தியாவை மீண்டும் தாக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் எல்லையில் வீரர்களை குவிக்கிறது. இந்தியாவும் வீரர்களை குவித்த நிலையில் இன்று காலையில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கராச்சியில் உள்ள அரபிக்கடலில் ஏவுகணை சோதனையை தொடங்கி உள்ளது. நேற்று தொடங்கிய ஏவுகணை சோதனை இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்நிலையில் தான் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் அரபிக்கடலில் நிலை நிறுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் கராச்சியில் உள்ள அரபிக்கடலில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ராந்த் அரபிக்கடலை நோக்கி விரைந்தது. தற்போது அரபிக்கடல் பகுதியில் பாகிஸ்தானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்துகிறது. அதனருகே இந்தியா நம் கடல் எல்லையில் ஐஎன்எஸ் விக்ராந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனை சேட்டிலைட் இமேஜ் உறுதி செய்துள்ளது. அதாவது கர்நாடகாவின் கார்வார் கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சீனியர் கடற்படை அதிகாரி கூறுகையில், ‛‛நாங்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது'' என்று கூறினார்.
ஐஎன்எஸ் விக்ராந்தை எடுத்து கொண்டால் இந்திய கடற்படையின் மிகவும் வலிமையான போர்க்கப்பலாகும். இந்த போர்க்கப்பல் என்பது கடந்த 2022ம் ஆண்டில் நம் கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களாகும். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர்விமானங்கள் வரை நிறுத்த முடியும்.
அதேபோல் கடற்படை ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். போர் விமானங்களை எடுத்து கொண்டால்
26 மிக்-29கே ரக விமானங்கள், 4 காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள், 4 எம்.எச். 60ஆர் ஹெலிகாப்டர்கள், இலகுரக 2 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த முடியும்.
இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியாது. 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து செல்லும் திறன் படைத்தது. 43,000 டன் எடையுள்ள இந்த கப்பலில், பயன்படுத்தப்பட்டுள்ள மின் வயர்களின் மொத்த நீளம் 2,500 கி.மீ. இதில் மொத்தம் 2,300 அறைகள் உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் மொத்தம் 262 மீட்டர் நீளம் கொண்டது. 59 மீட்டர் உயரம் கொண்டது. 62 மீட்டர் அகலம் கொண்டது. *
போர்க்கப்பலில்மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவு, தனிமைபடுத்தப்படும் அறைகள் ஆகியவையும் இதில் உள்ளன. இந்த கப்பலில் அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கப்பல் மூலம் கடலில் வெகு தொலைவில் இருந்து வான் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த கப்பலால் உடனடியாக அரபிக்கடலில் பாகிஸ்தான் எல்லை அருகே செல்ல முடியும். அங்கிருந்து இந்த கப்பல்கள் மூலம் விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்குள் பறக்கவிட்டு அதிரடி தாக்குதல் நடத்த முடியும். இதனால் பாகிஸ்தான் கதிகலங்கி உள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் நம் நாட்டின் கடற்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்நாட்டு தயாரிப்பாக ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை வானில் சீறிப்பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்குகிறது. எதிரி நாட்டின் ஏவுகணையை துல்லியமாக அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையும் அரபிக்கடலில் தான் மேற்கொள்ளப்பட்டது. ஐஎன்எஸ் சூரத் என்பது எதிரி நாடுகளின் ஏவுகணையை அழிக்கும் திறமை கொண்டது. அதேபோல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையிலான போர்விமானங்களை சுமந்து செல்லக்கூடியது. இதன்மூலம் பாகிஸ்தான் கடல் வழியாக நம்மை தாக்க முயன்றால் அதனை தடுக்கவும், பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராகி விட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications