டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி இஸ்ரேல் தூதரகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! கண்காணிப்பு தீவிரம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள டெல்லி லுடியன்ஸ் பகுதியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் உள்ளது. 2021 ஜனவரி மாதம் 29ல் இந்த தூதரகத்துக்கு வெளியே சக்தி குறைந்த ஐஇடி வகை குண்டு வெடித்தது.

Amid of serious fear of Iran attack Israel embassy in Delhi on high alert

அதன்பிறகு இஸ்ரேல் தூதரகத்தை சுற்றியுள்ள பகுதி முழுவதும் போலீஸ் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகளின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு முழு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டடது.

இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு 29 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. அதன்பிறகு 7 மாதங்களுக்குப் பிறகு 2021 செப்டம்பரில் யூத விடுமுறைகளையொட்டி ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தீவிரவாத செயலில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்தது.

 திடீரென.. இஸ்ரேல் பிரதமருக்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன விஷயம்? திடீரென.. இஸ்ரேல் பிரதமருக்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன விஷயம்?

இயைடுத்து இஸ்ரேல் நாடு மற்றும் பிற நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தூதரகத்தை சுற்றிய சாலைகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

English summary
The Israel embassy in New Delhi has reportedly been on high alert in recent weeks amid “serious” fears of a possible terror attack by Iran-backed perpetrators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X