‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜரூர்.. ஆராயும் குழுவில் அமித் ஷா உள்ளிட்ட 8 பேர்.. இதென்ன லிஸ்ட்டு இப்படி?
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயும் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முழக்கத்தைக் கடந்த பல வருடங்களாகவே மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை வரும் 2024ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது பாஜக அரசு. இதையொட்டி, தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவும் பாஜக அரசு முயன்று வருகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், 'ஒரே நாடு ஒரு தேர்தல்' சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
'ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய பாஜக அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் என மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயும் குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்தக் குழுவில், 15வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங், முன்னாள் லோக்சபா பொதுச் செயலர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்தக் குழுவின் உயர்மட்ட கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு EVM, VVPAT இயந்திரங்கள் போன்றவை உட்பட தேவையான தளவாடங்கள் மற்றும் மனிதவளத்தை இந்த குழு ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்துவது குறித்தும், அதற்கேற்ப சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதற்கான இந்த குழுவில் தேர்தல் ஆணையர், முன்னாள் தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகிய எவரும் இடம் பெறவில்லை என்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications