"குட்பை Gmail".. டிரம்ப் பாணியில் அமித்ஷா தந்த பதிலடி.. உள்துறை அமைச்சரின் E-mail ஐடி இனி இதுதான்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலை கைவிட்டுவிட்டு தமிழகத்தை தலைமையிடாக கொண்டு செயல்படும் ஜோஹோ நிறுவனத்தின் ஜோஹோ மெயிலுக்கு மாறி உள்ளார். மேலும் தனது புதிய மெயில் ஐடி இதுதான். இதனை நோட் செய்து கொள்ளும்படி அமித்ஷா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஜிமெயில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தை சேர்ந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாணியில் அமித்ஷா ஜிமெயிலுக்கு குட்பை கூறியுள்ளார்.
நம் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பல நிறுவனங்கள் நம் நாட்டை சந்தையாக பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கின்றன.

இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்பட பல ஐடி நிறுவனங்களை கூறலாம். இதனால் பிரதமர் மோடி ‛சுதேசி' இயக்கம் என்ற பெயரில் மக்கள் உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். அந்த வகையில் மத்திய அமைச்சர்கள் பலரும் அமெரிக்க நிறுவனங்களின் சாப்ட்வேர்களை பயன்படுத்துவதை கைவிட்டு ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவர் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் ஜோஹோ மெயிலை பயன்படுத்த தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக, அமித்ஷா இன்று தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஹலோ எவரிஒன். நான் ஜோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். எனது மாற்றப்பட்ட இ-மெயில் முகவரியை நோட் செய்து கொள்ளுங்கள். எனது புதிய இமெயில் முகவரி amitshah.bjp@ http://zohomail.in என்பதாகும். எதிர்கால தகவல் பரிமாற்றத்துக்கு இந்த இ-மெயில் முகவரியை பயன்படுத்தவும்'' என்று கூறியுள்ளார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாணியில் அமித்ஷா இந்த பதிவை செய்துள்ளார். அதாவது அமித்ஷா தனது கடைசி வரியில், "Thank you for your kind attention to this matter" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார். பொதுவாக டொனால்ட் டிரம்ப் தான் உத்தரவு மற்றும் வரி விதிப்பு தொடர்பான விஷயங்களை தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிடும்போது கடைசி வரியில் "Thank you for your kind attention to this matter" என்று குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் டிரம்ப் பாணியில் அமெரிக்காவை மையப்படுத்தி செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு அமித்ஷா குட்பை சொல்லி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமித்ஷாவின் இந்த செயலை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைக்கு நன்றி சார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோஹோவில் கடுமையாக உழைத்த எங்களின் கடின உழைப்பாளிகளான இன்ஜினியர்களுக்கு இந்த தருணத்தை நான் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவில் தங்கி வேலை செய்ததற்கான நம்பிக்கை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த். ஜெய் பாரத்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூகுள் வொர்க்பிளேஸ் மற்றும் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளுக்கு பதில் Zoho's office suite software-யை பயன்படுத்துவதாக அறிவித்தார். அதன்பிறகு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை புறம்தள்ளிவிட்டு ஜோஹோ தயாரிப்புக்கு மாறினார்.
குறிப்பாக ஜோஹோ மெயிலை எடுத்து கொண்டால் பல்வேறு அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் இந்த ஜோஹோ மெயிலை சமீபத்தில் பயன்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டார். அந்த வரிசையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜோஹோ மெயிலுக்கு மாறி உள்ளார் .
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications