அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன்.. அமித்ஷா சொன்ன வார்த்தை.. எடப்பாடி உடைத்த சீக்ரெட்
டெல்லி: அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா ஏற்கனவே திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். யார் கட்சி கட்டுப்பாட்டை மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2011ல் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை ஜெயலலிதா நீக்கினார். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முகமுடி அணிந்து அதிமுகவிற்குள் வந்தவர்தான் டிடிவி தினகரன். அவர் நான் முகமுடி அணிந்து சென்றாக கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது - எடப்பாடி பழனிசாமி
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதில் இருந்துதான் டிடிவி தினகரன் இப்படி பேசுகிறார். இதில் என்ன உள்குத்து உள்ளது என்று தெரியவில்லை. அமித்ஷாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி விட்டார். எல்லாம் சரியாகி விட்டது. பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டது. யாரையும் சந்தித்ததாகவோ, அழைப்பு விடுத்ததாகவோ வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என அமித் ஷா தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படும் உறுப்பினர்கள் மீது தலைமை உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
நேற்று முதல்நாள் நேற்று உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த செயல் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
இதற்கு முன்பே ஒரு முறை அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் சென்றார். அதன் புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் அப்போது அவர் கார் மாறி மாறி சென்றார். இந்த புகாரை முதல்வர் ஸ்டாலினே வைத்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி செல்கிறார் என்று புகார் வைக்கப்பட்டது. இப்போது அவர் மாஸ்க் போடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கலக்கமாக பேசி இருந்தார். அதில் நான் ஆட்சி பொறுப்பேற்றபோது, 4-5 மாதங்களில் ஆட்சி இழப்பேன் என்றுதானே பலரும் சொன்னீர்கள்... ஒரு சாதாரண விவசாயிக்கு யார் ஆதரவு கொடுத்தீர்கள்?
என் திறமை, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவால் மட்டுமே ஆட்சி நடந்தது; மத்திய அரசும் நாங்கள் கேட்ட திட்டங்களுக்கு அனுமதியும் நிதியும் கொடுத்தது. அதனால்தான் 4 ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு எங்களுக்கு உதவியது என நான் கருத்து தெரிவித்தேன்.
திமுக அரசை அகற்றுவதில் மக்களும் உறுதியாக இருக்கிறேன். திமுக அரசை அகற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன், என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம்












Click it and Unblock the Notifications