பதவியை விட.. இளைஞர்களும், மாணவர்களுமே எங்களுக்கு முக்கியம்!- அமித்ஷா சொன்னதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தின் விளைவாக, நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "எங்களுக்கு பதவிகளை விட மாணவர்கள், இளைஞர்களும்தான் முக்கியம்" என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "பாஜகவை பொறுத்தவரை இந்த நாடும், நாட்டின் இளைஞர்களும், மாணவர்களும்தான் எந்த ஒரு பதவியை விட மேலானவர்கள். தர்மேந்திர பிரதானின் ராஜினாமா இந்த உயரிய கொள்கைகளை வெளிகாட்டுகிறது. இளைஞர்களின் உணர்வுகளுக்கு மோடி அரசு மதிப்பளிக்கிறது.

Amit Shah

அதே நேரம், இந்த அரசு வினாத்தாள் கசிவு விஷயத்தை சீரியஸாக அணுகியிருக்கிறது. இந்த முறைகேடுகளை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதிலும் அரசு உறுதியாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களின் போராட்டம்

நீட் வினாத்தாள் 152 முறை லீக் ஆகியிருந்தது. நீட் தேர்வே ஒரு மோசடிதான்.. இதில் வினாத்தாள் கசிவு என்பது.. அதைவிட பெரிய மோசடி என்று மாணவர்கள் கொந்தளித்தனர். எனவே இந்த பிரச்சனைக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 20ம் தேதியன்று நாடாளுமன்றம் நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் பேரணியாக புறப்பட்டனர்.

பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

பிரச்சனையை நீர்த்து போக செய்ய எவ்வளவோ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. பேப்பர் லீக் குறித்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதேபோல நீட் பிரச்சனையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதெல்லாம் செய்தாலும் கூட, தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டுமே முக்கியமானது என்று மாணவர்கள் விடாப்பிடியாக இருக்க.. வேறு வழியின்றி மத்திய அரசு இறங்கி வந்தது.

நேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து.. இந்த ராஜினாமா குறித்து அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+