விஜயிடம் பேசுங்கள்.. எடப்பாடிக்கு போனை போட்ட அமித் ஷா.. டெல்லியில் எடுக்கப்பட்ட மேஜர் முடிவு! என்ன?
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயுடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என ஈபிஎஸ்-ஐ அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கட்சி வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அமித் ஷா தனிப்பட்ட முறையில் ஈபிஎஸ்-க்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். விஜய்யை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது மிக முக்கியமான பணி என்று அமித் ஷா அப்போது வலியுறுத்தியுள்ளார்.
அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜய்யை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இரு தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்குமாறும் அமித் ஷா, ஈபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்
இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் விஜயின் அதிகரித்து வரும் செல்வாக்கு, மாநிலத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பாஜக தலைமை நம்புகிறது. சமீபத்தில் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தொடங்கிய விஜய், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் தமிழகத்தில் ஏற்கெனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் நகர்ப்புற மற்றும் நடுத்தர வாக்காளர்களின் பெரும் பிரிவினரை அவரது கட்சி ஈர்க்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமித் ஷாவின் இந்த நடவடிக்கை, தென்னிந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கான பாஜகவின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எப்போதும் பாஜகவுக்கு ஒரு சவாலான மாநிலமாக இருந்துள்ளது.
அதிமுக மற்றும் விஜயின் TVK ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரு கூட்டணி அமைந்தால், அது கள நிலவரத்தையே மாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்த தெளிவை விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு முதல்வர் வேட்பாளர் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், துணை முதல்வர் பதவியை விஜய்க்கு கொடுப்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உடன் கூட்டணி வைக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வரும் நிலையில்.. இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
தேமுதிக - அதிமுக இரண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் திமுகவை வீழ்த்திய அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் மறக்க முடியாதது. அதேபோன்ற வரலாற்றை மீண்டும் விஜய்யை வைத்து செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 48 மணி நேரமாக அதிமுக டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications