டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நரேந்திர மோடி அமைச்சரவையில் யார் யார்.. அமித்ஷா இடம் பெறவில்லையாமே?

Google Oneindia Tamil News

Recommended Video

    மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா?.. மத்திய அமைச்சர் பதவியா?- வீடியோ

    டெல்லி: டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் தனிபெரும்பான்மை பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பொறுப்பேற்கின்றது.

     AmitShah could be continue as BJP National President for sometimes

    இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை அமித்ஷாவும் நரேந்திர மோடியும் தயார் செய்து வந்தனர்.

    தலைநகரில் தமிழனுக்கு தலைகுனிவு.. கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்.. தமிழிசை ஹேப்பி! தலைநகரில் தமிழனுக்கு தலைகுனிவு.. கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்.. தமிழிசை ஹேப்பி!

    கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்னதாக இருவரும் நான்கரை மணி நேரமாக ஆலோசனை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்றைய தினம் இவர்கள் தயாரித்த பட்டியலை இறுதியும் செய்துவிட்டனர். எல்லாம் சரி , அருண் ஜேட்லி தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கூறிவிட்டதால் தற்போதைய மிகப் பெரிய கேள்வி நிதித் துறை யாருக்கு என்பதுதான்.

    நிதி துறை அமித்ஷாவுக்கு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அவர் அமைச்சரானால் தேசிய பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமாம். அவ்வாறு ராஜினாமா செய்து விட்டால் திடீரென தலைமைக்கு என்ன செய்வது என்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றன.

    இந்த நிலையில் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் வரை அவர் பாஜக தேசிய தலைவராகவே தொடர்வார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்றைய தினம் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அக்கட்சிக்கு இரு அமைச்சரவை பதவிகள் வேண்டும் என கோரியதாக தெரிகிறது.

    அது போல் 4 அமைச்சர் பதவி கேட்ட சிவசேனாவுக்கு இரண்டு பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமரின் முதன்மை செயலாளரும், கூடுதல் முதன்மை செயலாளரும் அமித்ஷாவின் இல்லத்தில் 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் யார் யார் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

    English summary
    AmitShah could be continue as BJP National President for sometimes till he induces in to cabinet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X