பிஸ்னஸ் கிளாசில் பீதியை கிளப்பிய வௌவால்.. 'ஏர் இந்தியா' விமானம் அவசரமாக தரையிறக்கம்!
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் வெளவால் இறந்து கிடந்ததால் அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரை இறக்கப்ட்டது.
தலைநகர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நெவார்க்கிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பிஸ்னஸ் கிளாஸ் பிரிவு இருக்கை அருகே வெளவால் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதனை தொடந்து பிஸ்னஸ் கிளாஸ் பிரிவில் 8DEFஇருக்கை அருகில் இருந்து வெளவால் உடல் அகற்றப்பட்டது. அந்த விமானம் தூய்மைபடுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் நெவார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்துக்குள் வெளவால் எப்படி வந்தது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications