"உடனே உள்ளே வாங்க".. ஆட்டத்திற்கு முன் அழைக்கப்பட்ட வீரர்.. இந்திய - ஆஸி டெஸ்டில் நடந்த பரபர சம்பவம்
பிட்சில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய காரணத்தால் பிட்ச் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே மறைந்து போயின.
டெல்லி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக வீரர் ஒருவர் திடீரென பெவிலியனுக்கு அழைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 177 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சிலேயே 400 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ஜடேஜா, அக்சர் அறை சதம் அடித்தனர்.

இன்னிங்ஸ் வெற்றி
இதையடுத்து இறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முக்கியமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையாக பிரஷர் கொடுத்தார். இதனால் ஆஸ்த்திரேலியா அணி வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலிய அணி இதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த பிட்சில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய காரணத்தால் பிட்ச் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே மறைந்து போயின.

இந்திய அணி
இதையடுத்து இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடைபெறுகிறது. டெல்லியில் இந்த போட்டி நடைபெறுகிறது. பிட்ச் காரணமாக தற்போது கடுமையாக பந்து ஸ்விங் ஆகிக்கொண்டு இருக்கிறது. கடும் பனிபொழிவிற்கு இடையில் மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இன்று களமிறக்கப்பட்டு உள்ளனர். கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட சூர்யா குமார் யாதவ் இந்த போட்டியில் களமிறக்கப்படவில்லை.

ஷ்ரேயாஸ்
அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டு உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக வீரர் ஒருவர் திடீரென பெவிலியனுக்கு அழைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மேட்சில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

மேத்யூ குஹ்னெமன்
இதில் மேத்யூ குஹ்னெமன் ஆஸ்திரேலிய அணியில் இன்று அறிமுகம் ஆனார். அவர் இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடியது இல்லை. இதனால் அவரிடம் ஆஸ்திரேலியாவின் வெள்ளை உடையில் போட்டோ இல்லை. அவர் இப்போதுதான் ஆஸ்திரேலியா ஸ்கூவாடிலும் நுழைந்த காரணத்தால் தொடருக்கு முன்பும் அவரின் புகைப்படம் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று மேட்சிக்கு முன் ஆஸ்திரேலிய நிர்வாகிகள் அவரை அவசரமாக உள்ளே அழைத்து சென்றனர். உள்ளே அழைத்து சென்று அவரின் புகைப்படத்தை எடுத்தனர். அணி அறிவிக்கும் முன்பே அவரின் புகைப்படம் எடுக்கப்பட்டதால் அவர் இன்று களமிறக்கப்படுவது அப்போதே உறுதியானது. மேத்யூ குஹ்னெமன் இடது கை ஸ்பின் பவுலர் ஆவார். ஜடேஜா, அக்சர் போல இவரை தங்கள் அணிக்கு பயன்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications