கடற்கரையில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம்.. கடல் கன்னியா? ஆய்வுகள் சொல்வது என்ன? பயங்கரமா இருக்கே!
டெல்லி: பப்புவா நியூ கினியாவில் உள்ள கடற்கரையில் வினோதமான உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்கடலில் மீன், ஆமை, நண்டு, திமிங்கலம், ஆக்டோபஸ் உள்ளிட்டவை இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நிறைய பெயர் தெரியாத பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இருப்பது நமக்கு தெரியாது.

கடலில் கடற்கன்னி, கடல் பாம்பு, கடல் குதிரை உள்ளிட்டவை இருப்பதும் நமக்கு தெரிந்ததே. ஆனால் அவையெல்லாம் எல்லாருமே நேரில் பார்த்திருக்க முடியாது. அப்படியிருக்கும் நிலையில் பப்புவா நியூ கினியாவில் ஒரு விசித்திரமான விலங்கு கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி , பப்புவா நியூ கினியாவில் பிஸ்மார்க் கடலில் உள்ள சிம்பேரி தீவில் உள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் உள்ளது. கடல் கன்னிபோல் காட்சியளிக்கிறது. மிக நீளமாக உள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில் இந்த உயிரினம் குளோப்ஸ்டர் என அழைக்கப்படுகிறது. இந்த உயிரினத்தின் பெரும்பகுதி அழுகி விட்டது. பல பாகங்கள் கடலில் விழுந்துவிட்டன. இதை தேடியும் கிடைக்கவில்லை. உள்ளூர்வாசிகள்தான் அதை புதைத்தனர். சடலத்தின் அளவு மற்றும் எடை குறித்து எந்த தகவலும் எடுக்கப்படவில்லை.
அதன் டிஎன்ஏ மாதிரிகளை கூட யாரும் சேகரிக்கவில்லை என்றார். இந்த உயிரினம் கடல் பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்காக இருக்கலாம் என தெரிகிறது என பலர் தெரிவித்துள்ளனர். குளோப்ஸ்டர் என்றால் கடல் வாழ் உயிரினங்களின் சதைகள் என்கிறார்கள். மேலும் அது ஒரு கடல் பசுவாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அந்த உயிரினம் பல வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.
இது ஒரு பெரிய சுறா மீனாக இருக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவ இது ஒரு கடல் பாலூட்டியாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த விலங்கு குறித்து கடல் வாழ் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தோல் வேறு நிறத்தில் இருந்திருக்கும். இறந்தததால் தோல் உரித்துக் கொண்டு அதன் நிறம் வெள்ளையாக மாறியிருக்கலாம் என்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications