டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னா வேணும்..5 குவார்ட்டர் வேணும்.. பைப் வழியா அனுப்பறேன் பிடிச்சுக்கோ.. அடடே ஐடியா! இன்னோவேட்டிவ்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பீதியால் நாம் யாரையும் தொடாமல் பொருட்களை பெறுவதே பாதுகாப்பான நடைமுறையாகும். இவற்றை உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களில் கடைப்பிடிக்கலாம். ஆனால் மதுபான பாட்டில்களில் எப்படி கடைப்பிடிப்பது? நீங்களே பாருங்கள்.

மகிந்த்ரா குரூப்களின் தலைவர் ஆனந்த மகிந்த்ராவின் ட்விட்டர் வீடியோவை பார்த்தால் அதுவும் சாத்தியம் என்றே தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதுவை எல்லைகள் மூடல்..சென்னையில் இருந்து இ பாஸுடன் வந்தாலும் அனுமதி இல்லை- முதல்வர் நாராயணசாமிபுதுவை எல்லைகள் மூடல்..சென்னையில் இருந்து இ பாஸுடன் வந்தாலும் அனுமதி இல்லை- முதல்வர் நாராயணசாமி

வீட்டு வாசற்படி

வீட்டு வாசற்படி

இதனால் நாம் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவற்றை கடைப்பிடித்து வருகிறோம். வெளியில் வாங்கி வரும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நீரில் கழுவி வைக்கிறோம். அது போல் ஓட்டல்களில் இருந்த பெறப்படும் உணவு வகைகளும் வீட்டு வாசற்படியில் வைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்

பிளாஸ்டிக் பாட்டில்

அந்த வகையில் மதுபான பாட்டில்களையும் விற்பனையாளரை தொடாமல் வாங்கும் புதிய ஐடியா வைரலாகி வருகிறது. வடஇந்தியாவில் ஒரு மதுபான கடையில் வாடிக்கையாளருக்கும் கடைக்கும் நீண்ட பைப் போடப்பட்டுள்ளது. அந்த பைப் வழியாக பிளாஸ்டிக் பாட்டிலை கடைக்காரர்கள் அனுப்புகிறார்கள்.

காசு

காசு

அவர் அனுப்பும் பாட்டிலில் காசை வைத்து அனுப்பினால் தேவையானதை எடுத்து கொண்டு மீதி சில்லறை அந்த வாட்டர் பாட்டிலில் வருகிறது. பின்னர் வாடிக்கையாளர் கொடுத்த பணத்திற்கு உண்டான சரக்குகளும் பைப் மூலம் வருகிறது. இதை எடுத்து கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

Recommended Video

    Abhigya Anand Exclusive : 'கொரோனா வைரஸ் பிரச்சினை 2021 நவம்பர் வரை எச்சரிக்கையா இருங்க!'
    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    கூட்ட நெரிசல் இல்லை. முண்டியடித்து வாங்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வாங்க முடியும். பாட்டில்கள் கீழேவிழுந்தாலும் உடையாத வண்ணம் அட்டை பெட்டிகள் நிரப்பட்டுள்ளன. இதுதான் சரியான சமூக இடைவெளி. இது போன்ற டெக்னிக் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது மதுபான பாட்டில்களுக்கும் பயன்படுகிறது.

    English summary
    Anand Mahindra posts video of liquor shop which uses contactless delivery. It was impressed by drunkards.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X