அனந்த்குமார் மரணம்.. கர்நாடகத்திற்குப் பேரிழப்பு.. காவிரிக்காக தீவிரமாக போராடியவர்!
Recommended Video

டெல்லி: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக எதுவும் நடந்து விடாமல் தான் சார்ந்த கர்நாடகத்திற்கு ஆதரவாக, மத்தியில் தீவிரமாக பாடுபட்டவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார்.
கர்நாடக காவிரி பாசனப் பகுதி மக்களால் மறக்க முடியாத ஒரு தலைவர் அனந்த் குமார். பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இல்லாத போதும் சரி, கர்நாடகத்தின் முக்கிய விவகாரமான காவிரிப் பிரச்சினையில் தனது மாநிலத்திற்காக தீவிரமாக பாடுபட்டவர் அனந்த் குமார்.
கர்நாடகாவிலிருந்து வரும் அனைத்துக் கட்சிக் குழுக்களில் தவறாமல் இடம் பெற்று, கட்சி பாகுபாடின்றி, மாநில நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டவர் அனந்த் குமார்.

வாரியத்திற்குப் பதில் ஆணையம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் காவிரிப் பிரச்சினையில் அனல் வீசியது. உச்சநீமன்றம் காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பை அளித்தது. அந்தத் தீர்ப்பு தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தீர்ப்பின்போது காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில் ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

நெருக்குதல் - லாபி
காவிரி மேலாண்மை வாரியம் அமைய விடாமல் மத்திய அரசை தடுத்து ஆணையம் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசை வரவைத்ததில் அனந்த் குமாரின் பங்கு மிக முக்கியமானது. இவர் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினரின் நெருக்குதல்கள் மற்றும் தீவிர லாபியால் மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிரான மன நிலைக்கு போனது.

கர்நாடகத்திற்கு இழப்பு
உண்மையில் அனந்த்குமாரின் மறைவு, கர்நாடகத்திற்கு பெரும் இழப்புதான் காவிரி விவகாரம் என்றில்லாமல், பல்வேறு மாநிலம் சார்ந்த பிரச்சினைகளுக்காக டெல்லியில் தீவிரமாக குரல் கொடுத்து அதை சாதிப்பதிலும் வெற்றி கண்டவர் அனந்த் குமார். கர்நாடக பாஜகவுக்கும் கூட இவரது மறைவு பெரும் இழப்புதான்.

தமிழகத்திற்கும் இவர் போல கிடைத்திருந்தால்
தமிழகத்திற்கு அனந்த் குமார் போல ஒரு அமைச்சர் கூட மத்தியில் இதுவரை அமைந்ததில்லை. அனந்த் குமார் போன்ற ஒரு தலைவர் தமிழகத்திற்கும் கிடைத்திருந்தால் தமிழகமும் கூட பல நல்ல வளங்களை மத்தியிலிருந்து பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications