பிப்.14-ல் பசு அணைப்பு தினம்- சர்ச்சைகளைத் தொடர்ந்து கைவிட்டது இந்திய விலங்குகள் நல வாரியம்

பிப்ரவரி 14-ந் தேதி பசு அணைப்பு தினம் என்ற அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது விலங்குகள் நல வாரியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிப்ரவரி 14-ந் தேதி பசுக்களை கட்டிப் பிடிக்கக் கூடிய பசு அணைப்பு தினம் கொண்டாட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய அறிவுறுத்தலை இந்திய விலங்குகள் நல வாரியம் கைவிட்டுள்ளது.

பிப்ரவரி 14-ந் தேதி உலக நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொதுவாக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். சில இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்களில் வன்முறைகளும் நிகழ்வது உண்டு.

Animal Welfare Board withdraws Cow Hug Day on 14th February

இந்நிலையில் மத்திய கால்நடைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவுறுத்தலை விடுத்தது. அதாவது பிப்ரவரி 14-ந் தேதி, பசுக்களை கட்டிப் பிடிக்கக் கூடிய வகையில் பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் எஸ்.கே.தாத்தா தமது அறிக்கையில் கூறியிருந்ததாவது: மேற்கத்திய நாடுகளின் கலாசார தாக்கங்களால் நமது வேதகால பண்பாடு என்பது அழிந்து வருகிறது. நமது பாரத தேசத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவை மேற்கத்திய கலாசார தாக்கத்தால் மறக்கப்பட்டு வருகிறது.

பசுக்கள் நமது வாழ்வியலில் அதிக பலன்களைத் தருகின்றன. பசுக்களை நாம் அரவணைப்பதால், கட்டிப் பிடிப்பதால் மன ரீதியான வளம் அதிகரிக்கும். இது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்திலும் கூட மகிழ்ச்சியை உருவாக்கும். இதனால்தான் பசுவை நேசிப்பவர்கள், மதிப்பவர்கள் வரும் பிப்ரவரி 14-ந் தேதியை பசுவை அணைக்கின்ற, கட்டிப்பிடிக்கின்ற தினமாக கொண்டாடுங்கள். இவ்வாறு

மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாசாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது. பசுக்கள் ஏராளமான பலன்களைத் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மன ரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனி நபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். இவ்வாறு எஸ்.கே.தத்தா கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்துத்துவவாதிகள் பசு கோமியம், பசு சாணம் ஆகியவற்றை முன்வைத்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளாகிப் போனது. இந்த வரிசையில் பசு அணைப்பு தினமும் இணைந்து கொண்டது. இந்த பசு அணைப்பு தினத்துக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்தன. பசு அணைப்பு தினத்தை முன்வைத்து கிண்டலான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி, பாஜகவினருக்கு அதானிதானே புனிதப் பசு. ஆகையால் பாஜகவினர் புனிதப் பசுவாகிய அதானியை அரவணைத்துள்ளனர் என கிண்டலடித்தார். இதேபோல பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர். இதனையடுத்து தற்போது இந்த அறிவுறுத்தலை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+