பார்த்தீங்களா.. மோடியோடு அண்ணாமலை இருப்பதை! கர்நாடக தேர்தல் ஆலோசனை வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி
டெல்லி: நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அருகில் இல்லாததை வைத்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற கர்நாடக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் அண்ணாமலை அமர்ந்திருக்கும் வீடியோவை அக்கட்சி நிர்வாகி வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று 2 நாள் சுற்றுப்பயணமாக தென்மாநிலங்களுக்கு வnதிருந்தார். தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

அண்ணாமலை இல்லை: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் ஆகியோர் அரசு முறைப்படி வரவேற்பு கொடுத்தனர். அதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும்போது, அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இல்லை.
மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவிலும், சென்னை பல்லாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழா நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இதர மாநில பாஜக நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

எழுந்த கேள்விகள்: இந்த நிலையில் அண்ணாமலை மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வுகளில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதிமுகவுடனான மோதல், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று பேசியது, தமிழ்நாடு பாஜகவில் வெடித்துள்ள உட்கட்சி பூசல், முக்கிய நிர்வாகிகளின் விலகல் போன்றவற்றால் அவர் மீது டெல்லி அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு நெருக்கமானவரும், பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவருமான செல்வகுமார், "கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்யும் பணியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் டெல்லியில் அண்ணாமலையார் இருப்பதால் சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.

வெளியான வீடியோ: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக சார்பில் வழிநடத்த வேண்டிய மாநில தலைவர் இங்கு இல்லாததால் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார் பாரத பிரதமர்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை ட்விட்டரில் அவர் வெளியிட்டு உள்ளார்.
அதில், "அண்ணாமலையார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களுடன் கர்நாடகா வேட்பாளர் தேர்வு பற்றி பிரதமர் தற்போது கலந்துரையாடி வருகிறார்." என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, சிடி ரவி ஆகியோருடன் அண்ணாமலையும் அமர்ந்து இருக்கிறார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications