ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகட்டும் - சொல்கிறார் அண்ணாமலை.. “பாஜகவுக்கு” நல்லதாம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வந்தால் காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவுக்கும் நல்லது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.

சோனியா உடல்நிலை
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப் பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பு மற்றும் அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாகவும் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு சோனியா தள்ளப்படுகிறது.
மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை.

புதிய தலைவர் யார்?
பிரியங்கா காந்தியை தலைவராக்க வேண்டும் என சில குரல்கள் ஒலித்தாலும் அதை அவரே விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. புதிய தலைவராக காந்தி குடும்பத்தை சாராத நபர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதில், முதன்மையாக இருப்பது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்த நிலையில் வரும் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு போன்றோர் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார். "காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வந்தால் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. பாரதிய ஜனதாவுக்கும் நல்லது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் 450க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றிபெறும்" என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications