அடேங்கப்பா.. ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு இப்படியொரு சலுகையா! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டும் சுமார் 40 ஆயிரம் வீரர்களை புதியதாக சேர்க்க ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்பட்டது.

Announcement of benefits for Agni soldiers in recruitment in Indian Railways

இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்பவர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம். அதற்கு முன்னர் சுமார் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த நான்கு ஆண்டுகள் சேவை முடிந்த பின்னர் இவர்களில் 25% பேர் மட்டும் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு, மீதமுள்ள 75% பேர் வெளியேற்றப்படுவார்கள். இவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு அவர்கள் 4 ஆண்டுகள் முடித்து சேவையிலிருந்து வெளியேறும்போது ரூ.11.7 லட்சம் வழங்கப்படும். இந்த ஆண்டு அக்னிபாத் திட்டத்திற்கு ரூ.4,266 கோடி நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்தன. குறிப்பாக இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இது இந்தி திட்டத்தின் மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிகபட்ச உயிர் தியாகத்தை கோரும் இந்த பணியில் ஒய்வூதியம் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ராணுவத்தில் பணியில் சேர்வதை கனவாக கொண்டிருக்கும் கோடிக்கணக்காக இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டம் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ராணுவத்திற்கு தயாராகும் வீரர்கள் குற்றம்சாட்டி திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறெந்த மாநிலத்தை காட்டிலும் பீகாரில் இந்த போராட்டம் பெருமளவுக்கு வெடித்தது. ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்த்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த அக்னி வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

அதாவது, மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 16 பொதுத் துறை நிறுவனங்களான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பாரத் எர்த் மூவர்ஸ், பாரத் டைனமிக்ஸ், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ், கோவா ஷிப்யார்டு, இந்துஸ்தான் ஷிப்யார்டு, மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், மிஸ்ரா தாத்து நிகாம், ஆயுத வாகனங்கள் தயாரிப்பு நிறுவனம் (ஏ.வி.என்.எல்), அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் (ஏ.டபிள்யூ. அண்ட் இ.ஐ.எல்), எம்.ஐ.எல்., ஒய்.ஐ.எல், ஜி.ஐ.எல், ஐ.ஓ.எல், டி.சி.எல ஆகிய துறைகளில் இவர்களுக்கு 10 இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல இந்திய கடலோரக் காவல் படை, பாதுகாப்புத் துறை அலுவலக பணிகளிலும், மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎப்), அசாம் ரைபிள்ஸ் படைகளில் சேரவும் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதேபோல இவர்களுக்கு வயது வரம்பிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய ரயில்வே துறையிலும் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே துறை வெளிியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"ரயில்வேயில் நேரடி பணியாளர் தேர்வு அடிப்படையில் நிலை-1 பணிகளில் 10 சதவிகித இடஒதுக்கீடும், நிலை - 2 மற்றும் அலுவலர் அல்லாத பணிகளில் 5 வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பணியாளர் தேர்வின்போது உடல் தகுதித் திறன் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். கடந்த ஆண்டிலிருந்து அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் பேட்ச் வீரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், அடுத்தடுத்த பேட்ச்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+