ஆப்பில் ஏற்றப்பட்ட இஸ்லாமிய பெண்களின் போட்டோஸ்.. நூற்றுக்கணக்கில் நடந்த ஏலம்.. பின்னணியில் யார்?
டெல்லி: கடந்த சில மாதங்களுக்கு முன் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வடஇந்தியாவில் இஸ்லாமிய பெண்களை இழிபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் Sulli என்பது ஆகும். இது பெரும்பாலும் வலதுசாரிகள் மூலம் வடஇந்திய மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும்.
இதை வைத்து Sulli Deals என்ற செயலி கடந்த 6 மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதில் இஸ்லாமிய பெண்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டது.

என்ன நோக்கம்?
இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். அதில் ஒரு நபர் லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கேட்கும். அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும். இதுதான் இந்த செயலியின் நோக்கம்.

உண்மை அல்ல
ஆனால் இது உண்மையான ஏலம் கிடையாது. இணையத்தில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள், சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்கள் ஷேர் செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றை அந்த செயலியில் பதிவேற்றி, ஒவ்வொரு பெண்னுக்கும் ஒவ்வொரு மதிப்பு என்று கூறி ஏலம் விடுவார்கள். உண்மையில் இதில் பெண்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றாலும், இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டது.

இஸ்லாமிய பெண்கள்
இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும், அவர்களை இழிபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர்களின் புகைப்படங்களை குறி வைத்து இந்த Sulli Deals செயலி உருவாக்கப்பட்டது. கடந்த வருடம் ஜூலை 4ம் தேதி இந்த Sulli Deals செயலி கண்டுபிடிக்கப்பட்டு அது இணையம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ் எம்பிக்கள் தொடங்கி பலர் இது தொடர்பாக கடுமையான புகார்களை வைத்தனர்.

போலீஸ்
டெல்லி மற்றும் உத்தர பிரதேச போலீசார் இது தொடர்பாக இரண்டு எப்ஐஆர் பதிவு செய்தனர். அதேபோல் Sulli Deals செயல்படும் தளமான GitHub தளத்திற்கு விளக்கம் கேட்டு கடிதமும் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. இதில் இதுவரை எந்த விதமான கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோசம்
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக தற்போது அதே பிளாட்பார்மில் இயங்கும் இன்னொரு 'Bulli Bai' என்ற செயலி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. அதேபோல இதிலும் தினமும் இஸ்லாமிய பெண்களை ஏலம் விடுகிறார்கள்.

ஏலம்
உண்மையில் பெண்களை விற்பனை செய்யவில்லை என்றாலும்.. நான் இவரை இவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறேன்.. இவ்வளவு ரூபாய்க்கு விற்கிறேன் என்று குரூர எண்ணத்தோடு இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் இந்த செயலியை நடத்தி வருகிறார்கள். நூற்றுக்கணக்கில் பெண்களின் புகைப்படங்கள் இதில் பகிரப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
இந்த செயலி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த செயலிக்கு எதிராக இணையத்தில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். டெல்லி மற்றும் மும்பையில் போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications