வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால்.. 10 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்! மசோதா தாக்கல்!
டெல்லி: வினாத்தாள் கசிவு என்பது நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை தூண்டியிருந்தது. இந்நிலையில், இதில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நீட் வினாத்தாள் லீக் குறித்து, கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஒரு மாத்திற்கும் மேல் டெல்லியில் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தது.

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம், கேரளா, பீகார், மகாராஷ்டிரா என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், அதேபோல.. இது போன்ற குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.
இந்த பின்னணியில்தான் தற்போது வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் இன்று சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
புதிய சட்டம் என்ன சொல்கிறது?
இந்த புதிய சட்டத்தின்படி, பேப்பர் லீக்கில் ஈடுபடும் தனி நபருக்கு 5-10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். அதுவே கூட்டு சதி எனில்.. அதாவது ஒரு கும்பல் சேர்ந்து திட்டமிட்டு பேப்பர் லீக்கில் ஈடுபடுகிறது எனில், 7-10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.


Click it and Unblock the Notifications
