ரோகிங்யா முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு? அமைச்சரின் தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு
டெல்லி: ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் ரோகிங்யா முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.
டெல்லியின் வடக்கு மாநகராட்சி ஜஹாங்கிர்புரி பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது ரோகிங்யா முஸ்லீம்கள் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியின் ஜஹாங்கிர்புரி எனும் இடத்தில் ரோகிங்யா முஸ்லீம்கள் வசித்த பகுதிகளை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் மாநகராட்சி இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பெரும் பதற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரிட்டபோதும் வீடுகளை இடிக்கும் பணிகள் 2 மணி நேரம் நீடித்திருந்தது. இந்நிலையில் இந்த ரோகிங்யா முஸ்லீம்கள் சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து தங்கியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இதனையடுத்து நேற்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்வீட் பின்வருமாறு, "இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மதம், இனம், நிறம் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து அகதிகளுக்கும் சமமான அளவில் மரியாதையை இந்தியா அளிக்கும்" என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ரோகிங்யா முஸ்லீம்கள் வசித்து வரும் பகுதிகள் தற்போது 'தடுப்பு முகாம்களாக' மாற்றப்பட இருப்பதாகவும் விரைவில் இவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல மத்திய அமைச்சர் அறிவித்திருந்த 'பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான' அடுக்குமாடி குடியிருப்புகள் ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வழங்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சில பிரச்னைகளைத் தொடர்ந்து ரோகிங்யா முஸ்லீம்களை வேறு இடங்களுக்கு மாற்ற டெல்லி அரசு கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து அமைச்சரின் அறிவிப்பு வரவே மத்திய உள்துறை அமைச்சகம் அதனை மறுத்துள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டதைப்போல ரோகிங்யா முஸ்லீம்களை சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ரோகிங்யாக்களை தற்போது இருக்கும் இடத்தில் நீடிப்பதையே உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications