இனி 5 வயது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி! கொரோனாவிடம் இருந்து காக்க திடீர் முடிவு! முழு விபரம் இதோ!
டெல்லி : கொரோனாவில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக 5 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியையும் 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியையும் அவசர கால பயன்பாட்டுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி
உலகமெங்கும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்தியுள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி வழங்கப்படுமென பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனையடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இது அடுத்ததாக இது 12 என குறைக்கப்பட்டது.

5 வயது முதல் அனுமதி
பல நாடுகளில் 3 வயது முதல் குழந்தைகளுக்கு தடுப்புசி வழங்கப்படும் நிலையில், இதனையடுத்து இந்தியாவிலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. காரணம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடப்படாததால் கொரோனா அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

DCGI உத்தரவு
இந்நிலையில் கொரோனாவில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற 5 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரியல் தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்டாலும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு வழங்க அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கோவாக்சின் செலுத்த ஒப்புதல்
தற்போது, பாரத் பயோடெக்கின் தடுப்பூசி 15 முதல் 18 வயது குழந்தைகளுக்கும், பயோலாஜிக்கல் ஈ புரோட்டீன் சப்-யூனிட் தடுப்பூசி 12 - 15 வயது குழந்தைகளுக்கும் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, சில நிபந்தனைகளுடன் 12-18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்த ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications