துபாய் ஏர் ஷோ விபத்து.. தேஜஸ் விமானங்களை விற்பதில் சிக்கல்! பேச்சுவார்த்தையில் பின்னடைவு
டெல்லி: துபாய் ஏர் ஷோவில் இந்திய தயாரிப்பான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விங் கமாண்டர் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வந்த நாடுகள் தற்போது பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளன.
கடந்த 21 ஆம் தேதி துபாயில் நடந்த ஏர் ஷோவில் தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் மிக குறைவான உயரத்தில் சாகசம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது அர்மீனியா உடன் போடப்பட்ட ஒப்பந்தம் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' எனும் திட்டத்திற்கு முக்கியச் சான்றாக தேஜஸ் விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சின் ரேடார் போன்ற சில முக்கியமான பாகங்கள் மட்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தேஜஸ் விமானங்கள் 6,500 கிலோ எடை கொண்டதாகும். மற்ற போர் விமானங்களை விட ஒப்பிடும்போது இந்த எடை குறைவானது. அதே போல குறைவான ஓடுபாதையில் இருந்து இதனால் பறக்க முடியும். வெறும் 460 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதை இருந்தாலே இந்த விமானம் டேக் ஆஃப் ஆவதற்கு போதுமான தூரமாகும். இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய ரேடார், 10 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணித்து தாக்கக்கூடிய அளவுக்கு மிகவும் திறன் வாய்ந்ததாகும்.
அந்த வகையில் சர்வதேச அளவில் இந்த விமானத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக அர்மீனியா சுமார் 12 போர் விமானங்களை ரூபாய் 10 கோடி கொடுத்து வாங்க தயாராக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்ட இருந்த நிலையில், தற்போது அர்மீனியா பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது. துபாய் விபத்து காரணமாகவே பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகமான ஜெருசலேம் போஸ்ட் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அர்மீனிய அரசிடம் இருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்தது எப்படி?
விபத்து தொடர்பான வீடியோவில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக விமானம் இடது புறமாக சாய்ந்து, குறைந்த உயரத்தில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அப்பொழுது விமானத்தை நேராக நிமிர்த்த விமான முயற்சித்தார். ஆனால், விமானம் போதுமான வேகம் இல்லாததால் ஸ்டால் எனும் நிலையை அடைந்தது. எனவே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து புவியீர்ப்பு விசை காரணமாக ஓரிரு வினாடிக்குள் கீழ்நோக்கி பாய்ந்து விபத்தில் சிக்கியது.
விமானம் பறக்க குறிப்பிட்ட வேகம் இருக்க வேண்டும். இந்த வேகத்தில் குறைவு ஏற்பட்டால், அது கீழே விழுந்து விடும் அபாயம் இருக்கிறது. போதுமான உயரத்தில் இருந்தால் இந்த விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அல்லது விமானத்திலிருந்து தப்பித்து இருக்க முடியும். ஆனால், உயரம் குறைவாக இருந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து விட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், துபாயில் நடந்த தேஜஸ் விமான விபத்து தனிப்பட்ட நிகழ்வு. இந்த சம்பவத்தால் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள், நிதி செயல்கள் அல்லது எதிர்கால விநியோகங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications