எழுவர் விடுதலை.. எங்களை இனியும் யாரும் ஏமாற்ற வேண்டாம்.. டெல்லியில் அற்புதம்மாள் கண்ணீர்!
டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் யாரும் ஏமாற்ற வேண்டாம் என அற்புதம்மாள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

10 மாதங்கள்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் 10 மாதங்களாகியும் ஆளுநர் அதில் கையொப்பமிடவில்லை.

அமித்ஷாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் 7 பேர் விடுதலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பிக்கள் திருமாவளவனும் ரவிக்குமாரும் இணைந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர்.

விவகாரத்தில்
இதற்காக அற்புதம்மாளையும் அவர்கள் வரவழைத்தனர். இந்த நிலையில் மூவரும் சேர்ந்து அமித்ஷாவிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் யாரும் ஏமாற்ற வேண்டாம்.

நீதிமன்றத்துக்கு
என் மகன் விடுதலை ஆவார் என நம்பியே 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. உச்சநீதிமன்றமே 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சொல்லிவிட்ட நிலையில் நாங்கள் இதற்கு மேல் எந்த நீதிமன்றத்துக்கு செல்வது.

முதல்வரையும் சந்திக்க திட்டம்
இதுகுறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா தெரிவித்தார். விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திப்பேன் என்றார் அற்புதம்மாள்.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications