டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னையும் கூட கைது செய்யுங்கள்.. மோடிக்கு எதிராக அவதூறு போஸ்டர்.. ராகுல் சவால்

Google Oneindia Tamil News

டெல்லி: மோடிக்கு எதிராக அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 17 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தங்களையும் கூட போலீசார் கைது செய்யலாம் என்று சவால் விட்டுள்ளனர்.

நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நரேந்திர மோடியை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Arrest me to.. Rahul Gandhi ask Delhi police over modi poster issue

இந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கண்டித்து டெல்லியின் பல பகுதிகளில் அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

நாடும் மக்களும் மீண்டும் மீண்டும் பேரழிவை சந்திக்க முடியாது - மத்திய அரசுக்கு ராகுல் வார்னிங்நாடும் மக்களும் மீண்டும் மீண்டும் பேரழிவை சந்திக்க முடியாது - மத்திய அரசுக்கு ராகுல் வார்னிங்

இந்த போஸ்டர்கள் தொடர்பாக டெல்லியில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த போஸ்டர்கள் ஒட்டிய 17 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர் இதுதொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. போஸ்டர் ஒட்டியதாக கைது செய்யப்பட்ட பலர் கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் என்றும் போஸ்டராக அச்சடித்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து போஸ்டர் ஓட்டியதற்காக 17 பேர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தன்னையும் கூட கைது செய்யும்படி டெல்லி போலீசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார்.. இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் தன்னை கைது செய்யும்படி சவால் விடுத்துள்ளார்.

English summary
Arrest me to.. Congress leader Rahul Gandhi ask Delhi police over modi poster issue . Delhi police today arrest 17 members who past poster in public place about PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X