அரவிந்த் கெஜ்ரிவால் கைது- ஜெயிலில் இருந்தாலும் முதல்வர்தான்.. ராஜினாமா இல்லை: ஆம் ஆத்மி திட்டவட்டம்!
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் தமது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்; அவர் தொடர்ந்து முதல்வராகவே நீடிப்பார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. டெல்லி முழுவதும் மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என புகார் கூறியவர் டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா. அத்துடன் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் அவர் பரிந்துரைத்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டியது. பின்னர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில்தான் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பாக திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனையடுத்து டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பதற்றமும் நிலவுகிறது.
இதனிடையே டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்; சிறைக்குப் போனாலும் அங்கிருந்தும் முதல்வராகவே பணியை தொடருவார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்குப் போனால் புதிய முதல்வர் யார் என்பது தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications