ஜேம்ஸ் பாண்ட் தெரியுமா?.. ராகுலிடம் கேட்ட அருண் ஜேட்லி!.. மாஸ் பேச்சுக்கு மரண மாஸ் பதிலடி!
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வசனத்தை கூறி பதில் அளித்தது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வசனத்தை கூறி பதில் அளித்தது பெரிய வைரலாகி உள்ளது.
ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக மீதும், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மீதும் ராகுல் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு உடனடியாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்தார். நாடாளுமன்றத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு அருண் ஜேட்லி பதில் அளிக்கும் விதத்தில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் ஜேட்லி பதில்
லோக் சபாவில் ராகுலின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். அதில், ராகுல் காந்தி அவையில் கூறிய கருத்துக்கள் எதிலும் உண்மை கிடையாது. அவர் வெளியிடுவதாக கூறிய ஆடியோ கூட திரிக்கப்பட்டது. பொய்யானது. ராகுல் காந்தி தொடக்கத்தில் இருந்தே ரபேலை வைத்து மக்களை குழப்பி வருகிறார்.

மூன்று முறை
ராகுல் காந்தி சொல்வது போல பல குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக நாங்களும் வைக்க முடியும். நேரு குடும்பத்திற்கு எதிராக ஒரே ஒரு வழக்குதான் இருக்கிறது என்றால் பிரச்சனை கிடையாது, அவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்னனர் என்று கூறலாம். ஆனால் நேரு குடும்பத்திற்கு எதிராக போபர்ஸ், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், நேஷனல் ஹெரால்ட் என்று நிறைய வழக்குகள் உள்ளது.

முக்கிய வசனம்
ராகுல் காந்தி ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். அதில், ஒரு வசனம் வரும் ''ஒரு முறை நடந்தால் அது தற்செயல். இரண்டாவது முறை நடந்தால் அது விபத்து. மூன்றாவது முறையும் நடந்தால் அது சதி''. அதனால் நேரு குடும்பம் செய்த மூன்று ஊழலும் சதிதான் என்று அருண் ஜேட்லி கூறினார்.

வைரல்
அருண் ஜேட்லி பேசிய வசனம் 1964ல் வந்த கோல்டுபிஞ்சர் என்ற ஜேம்ஸ் பாண்ட் பட வசனம் ஆகும். நேற்று அருண் ஜேட்லி இதை கூறியது பெரிய வைரலாகி உள்ளது. ராகுலின் சிறப்பான பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அருண் ஜேட்லி என்று பாஜகவின் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications