மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன்.. சிறையிலிருந்து வெளியே வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதனையடுத்து திகார் சிறையிலிருந்து தற்போது கெஜ்ரிவால் வெளியே வந்திருக்கிறார்.
கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார். ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
நீதிமன்றம் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியிருந்தாலும், சிபிஐ வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே கெஜ்ரிவால் இன்றும் சிறையிலேயே இருந்து வந்தார். அதே நேரம் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, சமீபத்தில் இறுதி கட்டத்தை எட்டியது. ஜெக்ரிவால் தரப்பில் ஆஜராகியிருந்த சிங்வி, "சமூதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை. அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமீன் கிடைத்த பின்னர் சிபிஐ கைது செய்திருக்கிறது. கடந்த மே 10ல் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. ஜூலை 12ல் உச்ச நீதிமன்றம் விரிவான உத்தரவு வழங்கியுள்ளது. இந்த தேதிகளுக்கு இடைப்பட்ட நாளில் ஜெக்ரிவாலை CBI கைது செய்திருக்கிறது.
இந்த கைதுக்கான அவசியம் என்ன வந்தது? இந்த வழக்கில் கெஜ்ரிவால் தவிர அனைவரும் விடுதலையாகியுள்ளனர். 2024 ஜனவரிக்கு பிறகு என்ன நடந்தது? சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட கெஜ்ரிவாலின் பெயர் இல்லை. ஆனால் விசாரணை என அழைத்து வந்து 8-9 நேரம் வரை உட்கார வைத்திருக்கிறார்கள்.
கெஜ்ரிவாலை கைது செய்ய எந்த அடிப்படையும் இல்லை. அவரை விடுவிப்பதுதான் சட்டவிதி. சிறையில் அடைப்பது விதிவிலக்கு. ஒருவரை நீண்ட காலத்திற்கு வழக்கு விசாரணையே நடக்காமல் சிறையில் அடைக்க முடியாது. தண்டனை போல சிறையில் அடைக்க வேண்டாம்" என வாதாடியிருந்தார். மறுபுறம் ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது மத்திய அரசின் கூண்டு பறவைதான் சிபிஐ, என்ற மக்களின் பார்வையை சிபிஐ மாற்ற வேண்டும் என்றும், எந்த பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும் என்றும் சிபிஐ-க்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து கெஜ்ரிவால் இன்று மாலை 6.30 மணியளவில் திகார் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications