Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"4 தேர்தல்களில் எங்களிடம் தோற்று போன பாஜக.." டெல்லி மசோதா நிறைவேறிய மறுநொடி ஆவேசமான கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இது குறித்து முக்கிய பாயிண்டுகளை பார்க்கலாம்.

டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரிகள் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது.

 Arvind Kejriwal launched new attack against BJP After Delhi Bill Clears Parliament

இதற்கிடையே டெல்லி குடிமைப் பணி ஊழியர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது.

மத்திய அரசு: அதாவது அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. குறிப்பாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும் என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே மத்திய அரசு இந்த விவகாரத்தில் புதிய மசோதாவை கொண்டு வந்தது.

இந்த மசோதாவால் டெல்லியில் அதிகாரிகள் நியமிக்கும் அதிகாரம் ஆம் ஆத்மிக்கு இருக்காது. இது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவையே ரத்து செய்யும் வகையில் இருக்கிறது என்று பலரும் விமர்சித்தனர். இருப்பினும், இதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. கடந்த வாரம் இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேறியது: பல மணி நேரம் விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு ஆதரவாக 131 வாக்குகள் பதிவானது. அதேபோல மத்திய அரசுக்கு எதிராக 102 வாக்குகள் பதிவானது. இருப்பினும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் இதில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் மசோதா எளிமையாக நிறைவேறியது.

இதற்கிடையே இந்த மசோதா நிறைவேறிய சற்று நேரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

கடும் தாக்கு: அந்த வீடியோவில் கெஜ்ரிவால், "டெல்லியில் கடைசியாக நடந்த 4 தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தோல்வியடைந்தது, இதனால் அவர்கள் குறுக்கு வழியில் வந்து டெல்லியில் அதிகாரத்தைப் பிடிக்க முயன்றனர், இது இந்தியாவின் ஜனநாயகத்திற்குக் கறுப்பு நாள். மத்திய அரசு கொண்டு வந்த இந்த மசோதா டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயல்.

டெல்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி பக்கம் நின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்ற அத்தனை கட்சிகளும் இதில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்து குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா: முன்னதாக இந்த மசோதா மீது சுமார் 8 மணி நேரம் விவாதம் நடந்த நிலையில்,உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சட்டம் கட்டாயம் தேவை என்றும் இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சட்டம் டெல்லியில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக அறிவிக்கப்படும், இதன் மூலம் டெல்லி அரசின் அதிகாரிகளின் இடமாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குச் செல்லும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+