Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் ஓசியில் விமானத்தில் பயணிக்கலாம்,பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கூடாதா? மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலவச பேருந்து பயண திட்டம் தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இப்படி இருக்கையில், இந்த திட்டம் குறித்து பிரதமர் விமர்சித்திருப்பது ஏன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் முதன் முதலில் தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மாதாந்திர சேமிப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எதிர்பார்த்த அளவுக்கு கை மேல் பலனை கொடுத்திருக்கிறது.

Arvind Kejriwal responds to PM Modi s criticism of free bus travel scheme for women

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, பெண்களின் சேமிப்பும் உயர்ந்திருக்கிறது. எனவே தமிழகத்தை பின்பற்றி, தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா என இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த மாநிலங்களிலும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றதால் நாடு முழுவதும் இத்திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டம் குறித்து விமர்சித்து பேசியிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது, "தேர்தலுக்காக மாநில அரசின் கஜானாவை காலி செய்யும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு இல்லை. நீங்கள் ஒரு நகரத்தில் மெட்ரோவைக் கட்டுகிறீர்கள், பின்பு, அதே நகரத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வாக்குறுதியளிக்கிறீர்கள். இதனால், மெட்ரோ பயணிகளில் 50 சதவிகிதம் பேரை நீங்கள் வெளியே எடுக்கிறீர்கள்" என்று கூறியிருந்தார்.

இவரது கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனம் தெரிவித்திருந்தனர். "பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். "டெல்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதை பிரதமர் வெளிப்படையாக எதிர்க்கிறார். நாடு முழுவதும் இலவச பேருந்து பயணங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். பிரதமரும் அவரது அமைச்சர்கள் இலவச விமானப் பயணத்தைப் பெற முடியும் என்றால், ஏன் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்க முடியாது?" என்று தனது x தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+