யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறீர்கள்.. பாஜக தலைவர்களை வெளுத்துத் தள்ளிய கெஜ்ரிவால் மகள்!
Recommended Video
டெல்லி: தனது தந்தையை தீவிரவாதி என்று அழைத்த பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா.
இரு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டி ஒன்றில், அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரவாதிதானென்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரே தன்னை போராட்டக்காரர் என்று அழைத்துக் கொள்வதாகவும், போராட்டக்காரர், கிளர்ச்சியாளர் என்பதற்கும், தீவிரவாதி என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக எம்பி
முன்னதாக, பாஜக எம்பி பர்வேஸ் வர்மா, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசுகையில் அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று அழைத்தார். ஷாகின் பாக் போராட்டக்காரர்களுக்கு அவர் பிரியாணி வழங்குவதாகவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து ஆம் ஆத்மி கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் 96 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அவருக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழுக்கு
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாகூறுகையில், அரசியல் என்பது அழுக்கானது, சாக்கடை என்று கூறுவார்கள். ஆனால், இப்போது பாஜக தலைவர்கள் அதை இன்னும் கீழே கொண்டு சென்று விட்டனர். எனது தந்தையை தீவிரவாதி என்று அழைக்கிறார்கள். ஒரு தீவிரவாதி தான் சுகாதார திட்டங்களை மக்களுக்கு இலவசமாக கொண்டு சேர்த்தாரா?

தீவிரவாதியா
ஒரு தீவிரவாதிதான் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்று பாடுபட்டாரா? ஒரு தீவிரவாதிதான், மின்சாரம் மற்றும் குடிநீர் அனைத்து மக்களுக்கும் சென்றடைய உழைத்தாரா, என்று ஹர்ஷிதா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை அவர் இவ்வாறு. சுட்டிக் காட்டியுள்ளார்.
|
தேர்தல் நாள்
பாஜகவின் 200 எம்பிக்களையும், 11 முதல்வர்களையும் கொண்டுவந்து வேண்டுமானாலும் டெல்லியில் பிரசாரம் செய்யட்டும். ஆம் ஆத்மிக்காக 2 கோடி சாமானிய மக்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். தேர்தல் நாளன்று இவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும். வீண் பழிகளை சுமத்தும் அரசியல் மக்களுக்கு தேவையா? அல்லது வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கூடிய அரசு மக்களுக்கு தேவையா என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications