ரூபாயில் சாமி படம்! ராமர் கோவில்! கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவா அரசியலுக்கு மாறிய கெஜ்ரிவால்! பின்னணி
டெல்லி: 'ஊழல் எதிர்ப்பு' என்ற ஒற்றை கோஷத்துடன் அரசியல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால், கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவா அரசியலை கையில் எடுப்பதை பாஜக குழப்பத்துடனும், அச்சத்துடனும் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை பாஜகவுக்கு நிகராக இந்து ஆதரவு அரசியலை செய்வதற்கு வேறு கட்சிகள் இல்லாத நிலையில், தற்போது அந்த இடத்தை நோக்கி ஆம் ஆத்மி வருவதுதான் பாஜகவின் இந்த பயத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆம் ஆத்மியின் இந்த புதிய அவதாரத்தால், அந்தக் கட்சியை இனி எந்த வகையில் குற்றம்சாட்டி, எதிர் அரசியலை செய்வது என பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கேஜ்ரிவாலின் ராஜத்தந்திரம்
இந்தியாவை பொறுத்தவரை, அரசியல் கட்சி தொடங்கி ஒருசில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த தலைவர்கள் மிகக்குறைவு. அந்த மிகச்சிலரில் ஒருவர்தான் அர்விந்த் கேஜ்ரிவால். ஊழல் எதிர்ப்பு இயக்கமாக இருந்த ஆம் ஆத்மியை குறுகிய காலத்தில் ஒரு தேசிய அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்து இந்தியாவின் தலைநகரையே பிடித்த திறமைசாலி கேஜ்ரிவால். பாஜக, காங்கிரஸ் மட்டுமே களமாடி வந்த டெல்லியில் இரு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிப்பெரும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உயர்ந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பின்னால் கேஜ்ரிவாலின் உழைப்பும், ராஜத்தந்திரமும் இருக்கிறது.

பஞ்சாப் கொடுத்த பரிசு..
இவ்வாறு டெல்லியில் கோலோச்சிய ஆம் ஆத்மி, மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டது. தென் மாநிலங்களில் இது பெரிதாக கைக்கொடுக்காத போதிலும், சில வட மாநிலங்களில் ஓரளவுக்கு அக்கட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. இதனை பார்த்த கேஜ்ரிவால், ஓரளவு நம்பிக்கையுடனேயே பஞ்சாப் தேர்தலில் களமிறங்கியது. அங்கு வெறும் 'டெல்லி மாடல்' வளர்ச்சியை மட்டுமே மையப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மிக்கு பஞ்சாப் மக்கள் ஆட்சிக் கட்டிலை பரிசளித்தனர்.

இந்துத்துவா எதிர்ப்பால் பின்னடைவு..
பஞ்சாப் தேர்தலில் கிடைத்த வெற்றி, கேஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதே சமயத்தில், வெறும் வளர்ச்சியை மட்டுமே மையப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவது மற்ற மாநிலங்களில் உதவாது என்பது கேஜ்ரிவாலுக்கு தெரியவந்தது. மேலும், பாஜகவின் இந்துத்துவா அரசியலை எதிர்ப்பது வட மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதையும் தாமதமாகவே உணர்ந்தார் கேஜ்ரிவால். தாமதமாக உணர்ந்த போதிலும், அவர் வேகமாக செயல்படலானார். இந்துத்துவாக அரசியலை அவர் கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுக்க ஆரம்பித்தார். கடந்த சில ஆண்டுகளாக கேஜ்ரிவாலின் நடவடிக்கையையும், பேச்சையும் உற்று கவனித்தால் நமக்கு இது தெரியவரும். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

கேஜ்ரிவாலின் இந்துத்துவா அரசியல் - ஓர் அலசல்
கேஜ்ரிவால் திடீரென தனது அரசியலை இந்துத்துவா நோக்கி நகர்த்திச் செல்ல தொடங்கியது 2019-ம் ஆண்டில்தான். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பாஜக ரத்து செய்தது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, கேஜ்ரிவால் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். 2020-ம் ஆண்டு டெல்லி பேரவைத் தேர்தலின் போது அனுமார் கோயிலுக்கு கேஜ்ரிவால் சென்று பூஜை நடத்தினார்.

டெல்லி
2021-ம் ஆண்டு டெல்லியில் உள்ள பள்ளிகளில் தேசபக்தி வகுப்புகளை அறிமுகம் செய்யப்போவதாக கேஜ்ரிவால் அறிவித்தார். அதுவரை, தேசபக்தி பற்றி பாஜக மட்டுமே பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. 2021 மார்ச்சில், டெல்லியில் ராம ராஜ்ஜியம் அமைப்பதே தனது குறிக்கோள் என பகிரங்கமாக கேஜ்ரிவால் அறிவித்தார். அதன் பிறகு, அயோத்தியா ராமர் கோயிலுக்கு முதியவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இந்த நிலையில்தான், தற்போது ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி உருவப்படங்களை அச்சிட வேண்டும் எனப் பேசியுள்ளார் கேஜ்ரிவால்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications