ஆப்கானில் நடக்கும் விஷயங்கள்.. எங்களை கவலையடைய அடைய செய்கிறது.. யுஎன்எஸ்சியில் இந்தியா பேச்சு!
டெல்லி: அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் இந்தியாவை கவலையடைய அடைய செய்கிறது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவிற்கு வந்து தாலிபான்கள் அங்கு வெற்றிபெற்றுள்ளது. அதிபர் அஷ்ரப் கானியை வெளியேற்றிவிட்டு அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. விரைவில் அங்கு தாலிபான் சார்பாக அதிபர், அமைச்சர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அவசரமாக மீட்டிங் நடத்தப்பட்டது. இந்தியாதான் இந்த மாதத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நாடாக திகழ்ந்து வருகிறது. இதனால் இன்று நடந்த கூட்டத்தில் இந்தியாவின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்தியா
ஐநா கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பாக இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி பேசினார். அதில், ஆப்கானிஸ்தானில் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடு என்ற முறையில் அங்கு நடக்கும் விஷயங்களை இந்தியா கவனித்து வருகிறது.

கவலை
அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தற்போதைய விஷயங்கள் இந்தியாவை கவலையடைய அடைய செய்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புகிறோம். காபூலில் ஹாமித் கார்சாய் விமான நிலையத்தில் நடந்த விஷயங்கள் துரதிஷ்டவசமானது.

மக்கள் ஆச்சம்
அங்கு மக்கள் இடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. பெண்களும், குழந்தைகளும் பெரும் கவலையில் இருக்கிறார். அங்கு துப்பாக்கி சூடுகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு விமான நிலையத்தில் கூட துப்பாக்கி சூடுகள் நடந்ததாக செய்திகள் வருகின்றன.
Recommended Video

பாதுகாப்பு
அங்கு உடனே அமைதி திரும்ப வேண்டும். அங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கடைபிடிக்க வேண்டும். அங்கு ஐநா ஊழியர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட எல்லோருக்கும் அங்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications