ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

ஜாமீன்

ஜாமீன்

நேற்று அவரின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதேபோல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை. இந்த மனு மீது நாளையும் விசாரணை நடக்காது. ஆக.23-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும்.

லுக் அவுட்

லுக் அவுட்

அதேபோல் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது. ப. சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்வதை தடுப்பதற்காக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது. அதேபோல் அவரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பி உள்ளது.

யாரும் இல்லை

யாரும் இல்லை

இன்று காலையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டில்தான் இருந்தனர். அவர் வீட்டிற்கு வந்தால் கைது செய்ய வேண்டும் என்று அவரின் வீட்டில் காத்து இருந்தனர். ஆனால் அவர் நேற்று மாலையில் இருந்து எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து மாலையில் சிபிஐ அதிகாரிகள் அவரின் வீட்டை விட்டு சென்றனர்.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராக வாய்ப்புள்ளது என்கிறார்கள். சிபிஐ இதனால்தான் அவரின் வீட்டை விட்டு வெளியேறியது என்று கூறுகிறார்கள். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று இரவு ப. சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+