அம்மாவுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும்.. குடிக்க கூடாது.. வெஜிட்டேரியன் ஓகே.. சபாஷ் மகளே!

பெற்ற தாய்க்கு மகள் அஸ்தா வர்மா மாப்பிள்ளை தேடுகிறார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள் !-வீடியோ

    டெல்லி: சபாஷ் போட வைத்துள்ளார் இந்த மகள்.. தங்க மகள்.. செல்ல மகள்.. எப்படி வேண்டுமானாலும் இவரை சொல்லலாம்.. அம்மாவுக்காக இவர் பெண் பார்க்கிறார். இவருக்கு பலரும் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

    நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது அசதா வர்மா. சட்ட மாணவி, கவிஞர், அரசியல் நோக்கர், ஜாலி பேர்வழி, கலை நயம் மிக்கவர், தேசபக்தி கொண்டவர்.. இப்படி தன்னைத் தானே நிறைய சொல்லிக் கொள்கிறார் அசதா.

    இவர்தான் தனது அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். இவரது அம்மாவுக்கு சரியான, பொருத்தமான மணமகன் தேவை என்பதுதான் அசதாவின் விருப்பம்.

    இதுதொடர்பாக தனது டிவிட்டரில் ஒரு டிவீட் போட்டுள்ளார் அசதா. அதில், மாப்பிள்ளை தேடுதல் ஆரம்பிச்சாச்சு. எனது அம்மாவுக்கு 50 வயதாகும் பார்ப்பதற்கு நல்ல தோற்றமுடைய மாப்பிள்ளை தேவை. அவர் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும். நன்கு செட்டில் ஆனவராக இருக்க வேண்டும். வெஜிட்டேரியனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அசதா.

    வாழ்த்து

    அவ்வளவுதான் இதற்கு பதில்கள் குவிந்து விட்டன. அசதாவை பாராட்டி அத்தனை பேரும் பதில் டிவீட்டுகள் போட ஆரம்பித்து விட்டனர். உனது முயற்சிகள் வெற்றி பெறட்டும் என்று பலரும் வாழ்த்துக்களைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

    பாராட்டு

    இவ்வளவு பக்குவமாக இருக்கும் இந்தப் பொண்ணுக்கு வயசு வெறும் 22 தான். சமீபத்தில்தான் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது இந்த பொண்ணு. இந்த சின்ன வயதில் இவ்வளவு மெச்சூரிட்டியா என்று பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். உண்மையில் இந்தப் பெண்ணை பாராட்டத்தான் வேண்டும்.

    மறுமணங்கள்

    மறுமணங்கள்

    இந்த சமயத்தில்தான் நமக்கு ஒரு கேரள சம்பவம் நினைவுக்கு வருகிறது. அங்கு கூட இப்படித்தான் சமீபத்தில் ஒரு மகன் தனது தாய்க்கு மாப்பிள்ளை தேடி கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்தார் என்பது நினைவிருக்கலாம். இதுபோன்ற செயல்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். வெறுமனே ஏட்டளவில் இல்லாமல் இதுபோன்ற மறுமணங்கள் செயல்பாடுகளில் நடைபெறும்போதுதான் சமூகம் மேலும் மேன்மை அடையும். பக்குவப்படும்.

    பூர்த்தி

    பூர்த்தி

    அந்த வகையில் அசதாவின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அவரது அன்னைக்கு ஒரு அருமையான துணை கிடைக்கட்டும். அதைப் பார்த்து அசதா மட்டுமல்ல அவரைப் போன்ற நிலையில் உள்ள பிள்ளைகளும் கூட முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தத்தமது பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+