இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட்! தூக்கி போட்டு காலால் மிதித்த அமைச்சர் அஸ்வினி!
டெல்லி: கீழே போட்டாலும் ஏறி நின்றாலும் உடையாத இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டேப்லெட் குறித்து வீடியோவை மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தது விவிடிஎன் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் சாப்ட்வேர், அப்லிகேஷன்கள், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகிறது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குருகிராமில் உள்ள விவிடிஎன் நிறுவனத்திற்கு அமைச்சர் அஸ்வினி ஆய்வுக்கு சென்றிருந்தார். அங்கு அந்த நிறுவனம் தயாரித்திருந்த டேப்லெட்டை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அந்த டேப்லெட் குறித்து விளக்கினர். அப்போது அவர்கள் இந்த டேப்லெட்டை கீழே போட்டாலும் உடையாது. அதன் மீது ஏறி நிற்குமாறும் சொன்னார்கள்.
இதையடுத்து அஸ்வினி அந்த டேப்லெட்டை கீழ் போட்டார். உடையவில்லை. சிறு கீறல் கூட ஏற்படவில்லை. அது போல் அதன் மீது ஏறி நின்றார், அப்போதும் அந்த டேப்லெட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் அஸ்வினி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த டேப்லெட் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
नहीं टूटेगा!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 18, 2025
Designed in India, Made in India. pic.twitter.com/Ez6BpVasvJ
இதை எளிதில் உடைக்க முடியாது. நீண்ட காலம் உடையாமல் உறுதியாக இருக்கும். இந்த டேப்லெட்டுக்கு அடிப்பொலி என பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அஸ்வினி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் விவிடிஎன் நிறுவனம் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI Server) சர்வரையும் அஸ்வினி ஆய்வு செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு துறை அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2.4 லட்சம் கோடியாக இருந்த உற்பத்தி, 2024 ஆம் ஆண்டு 9.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் 3,900 வேலைவாய்ப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் அஸ்வினி தெரிவித்துள்ளார். இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications