5G-ஐ விடுங்க.. 6ஜி-இல் பாருங்க.. நாம டாப்பில் இருப்போம்.. பிரதமரே சொல்லி இருக்காரு! அஸ்வினி வைஷ்ணவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், டெலிகாம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

நமது நாட்டில் டெலிகாம் துறை மிகவும் முக்கியமானது. 4ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு, சில ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு துறைகள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இந்தச் சூழலில் தான் இந்தியாவில் நேற்று முன்தினம் 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதனிடையே இது குறித்து டெலிகாம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

 அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் இப்போது சில முக்கிய நகரங்களில் மட்டும் 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மிக விரைவில் 5ஜி சேவை படிப்படியாக மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடு முழுவதும் 100 5ஜி ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் மாணவர்கள் பெரியளவில் பயன் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 5ஜி ஆய்வகங்கள்

5ஜி ஆய்வகங்கள்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாடு முழுவதும் மொத்தம் 100 இடங்களில் 5ஜி ஆய்வகங்களை அமைக்க உள்ளோம். இதில் குறைந்தது 12ஐ டெலிகாம் இன்குபேட்டர்களாக மாற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இது குறித்து நான் கோரிக்கை விடுத்து இருக்கிறேன் பார்க்கலாம். இது மாணவர்களுக்குப் பெரிய அளவில் பயன் உள்ளதாக இருக்கும்.

 லைசென்ஸ் நடைமுறை

லைசென்ஸ் நடைமுறை

டெலிகாம் துறைக்கு வருபவர்கள் எளிதாக லைசென்ஸ் பெறும் வகையில் புதிய தொலைத்தொடர்பு மசோதாவை கொண்டு வந்து இருக்கிறோம். இதன் மூலம் டெலிகாம் துறையில் புதிய நிறுவனங்கள் எளிதாக நுழையலாம். லைசென்ஸ் நடைமுறையை எளிமையாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் ஆர்வமாக உள்ளன. இதன் மூலம் கிராமப்புற மக்கள் பெரியளவில் பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 முன்னிலை

முன்னிலை

5ஜி தொழில்நுட்பத்தை விட 6ஜி தொழில்நுட்பத்தில் நாம் முன்னிலை வகிப்போம். 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம். அதற்காக ஏற்கனவே ஆய்வுகள் தொடங்கி நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார். 6ஜி தொழில்நுட்பம் என்பது ஆறாவது தலைமுறை மொபைல் தொழில்நுட்பம் ஆகும். இது 5ஜி தொலைத்தொடர்பு சேவையை விட வேகமானதாக இருக்கும்.

 இந்தியாவில் 5ஜி

இந்தியாவில் 5ஜி

இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளான அக்.1ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். ஒரு நொடிக்கு 10 ஜிபி வரை இணையச் சேவை இருக்கும். இதன் மூலம் முழு படத்தையே சில நொடிகளில் டவுன்லோட் செய்துவிடலாம். முதற்கட்டமாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை ஆரம்பிக்க உள்ளன. விரைவில் மற்ற நிறுவனங்களும் 5ஜி சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

முன்னதாக 5ஜி வேகத்தை உணர்த்தும் வகையில், டெல்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இருந்தபடியே பிரதமர் மோடி 5ஜி மூலம் ஸ்வீடன் நாட்டில் இருக்கும் காரை இயக்கினார். அதிவேக 5ஜி இணையம் இதைச் சாத்தியமாக்கி உள்ளது. இந்த படங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+